TNPL Today Match Preview: முதல் வெற்றியை எதிர்நோக்கி திருப்பூர் தமிழன்ஸ் அணி-நெல்லையின் வெற்றி தொடருமா?
TNPL 2023: ஐடிரீம் திருப்பூர் தமிழன் தற்போது எந்த வெற்றியும் பெறாமல் 7வது இடத்தில் உள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10வது லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் நெல்லை கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜி.அஜிதேஷ் 126 ரன்கள் எடுத்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக எம்.பொய்யாமொழி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. பி.சச்சின் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தார். சுரேஷ்குமார் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் 52 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.
சேஸிங்கின் போது நெல்லை ராயல் கிங்ஸ் அணி அருண் கார்த்திக்கை தொடக்கத்திலேயே இழந்தது. பின்னர் ஸ்ரீ நிரஞ்சன் மற்றும் ஜி.அஜிதேஷ் ஆகியோர் தங்கள் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றனர். ஸ்ரீ நிரஞ்சன் 29 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜி.அஜிதேஷ் 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 பெரிய சிக்ஸர்கள் இருந்தன.
கடைசி ஓவரில் எம்.பொய்யாமொழி 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.
கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எப்படி?
ஐடிரீம் திருப்பூர் தமிழன் தற்போது எந்த வெற்றியும் பெறாமல் 7வது இடத்தில் உள்ளது.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் எடுத்தார்.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் விஜய் சங்கர். அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இன்னும் வெற்றி பெறாத திருப்பூர் இன்றைய ஆட்டத்தில் வெற்றியை நோக்கி விளையாடும். அதேநேரம், பக்கா ஃபார்மில் இருக்கும் நெல்லை அணி, திருப்பூர் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற முயற்சிக்கும்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் பரபரப்பு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
இரவு 7.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலிலும், ஃபேன்கோடு செயலியிலும் இப்போட்டியை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
டாபிக்ஸ்