Nellai Royal Kings: அருண் கார்த்திக் சதம்-நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
TNPL: நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் 61 பந்துகளில் 104 ரன்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று 14வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸும் மோதின.
சேலத்தில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய சேப்பாக் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடியது.
அந்த அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ஸ்ரீ நிரஞ்சன் 24 ரன்களிலும், ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், கடைசி வரை ஆட்டமிழக்காமல் அருண் கார்த்திக், 104 ரன்கள் எடுத்தார். 61 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்தார். 10 ஃபோர்ஸ், 5 சிக்ஸர்களை அவர் விளாசி அசத்தினார்.
இது இந்த சீசனில் அவர் பதிவு செய்த முதல் சதம் ஆகும்.
சேலத்தில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. முந்தைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்திவிட்டு உற்சாகத்துடன் வந்திருக்கிறது நெல்லை ராயல் கிங்ஸ்.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பிரதோஷ் பால் 2 ரன்னிலும், என்.ஜெகதீசன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபா அபராஜித் அரை சதம் விளாசினார்.
சஞ்சய் யாதவ் 15 ரன்களிலும், லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் நடையைக் கட்டினர். ஹரிஷ் குமார் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நெல்லை அணி சார்பில் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும், பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
120 பந்துகளில் 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடியது.
சேப்பாக் சார்பில் ராக்கி பாஸ்கர், எம்.சிலம்பரசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
டாபிக்ஸ்