Chepauk Super Gillies: சேலத்தில் அதிரடி காட்டிய பாபா அபராஜித்! சேஸ் செய்யுமா நெல்லை?
Nellai Royal Kings vs Chepauk Super Gillies: 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று 14வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸும் மோதுகின்றன.
சேலத்தில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. முந்தைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்திவிட்டு உற்சாகத்துடன் வந்திருக்கிறது நெல்லை ராயல் கிங்ஸ்.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய சேப்பாக் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது.
பிரதோஷ் பால் 2 ரன்னிலும், என்.ஜெகதீசன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபா அபராஜித் அரை சதம் விளாசினார்.
சஞ்சய் யாதவ் 15 ரன்களிலும், லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் நடையைக் கட்டினர். ஹரிஷ் குமார் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நெல்லை அணி சார்பில் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும், பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், மோகன் பிரசாத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
120 பந்துகளில் 160 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடவுள்ளது.
புதிய மைதானத்தில் விளையாடுவது கடினமாக இருந்திருக்கும். ஆனால், இந்த மைதானத்தில் அசத்தலாக விளையாடி 51 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார் அபராஜித்.
இதுகுறித்து ஆட்டம் முடிந்த பிறகு கூறுகையில், “நான் பந்தை கணித்து விளையாடினேன். நாங்கள் எடுத்தது நல்ல ஸ்கோர். பவுலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் கவனம் செலுத்தினால் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. இதுவரையிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. மீக நீண்ட போட்டித் தொடர்" என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்