Salem Spartans: மழை குறுக்கீடு-சேலம் அணி விளையாடியபோது ஆட்டம் நிறுத்தம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Salem Spartans: மழை குறுக்கீடு-சேலம் அணி விளையாடியபோது ஆட்டம் நிறுத்தம்

Salem Spartans: மழை குறுக்கீடு-சேலம் அணி விளையாடியபோது ஆட்டம் நிறுத்தம்

Manigandan K T HT Tamil
Jun 22, 2023 10:37 PM IST

Nellai Royal Kings: இதையடுத்து மழை நின்றதும், டக்வொர்த் லீவிஸ் முறையில் டார்கெட் 129 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி களமிறங்கியது.

டிஎன்பிஎல் கிரிக்கெட்
டிஎன்பிஎல் கிரிக்கெட் (@TNPremierLeague)

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் சேலம் அணி, 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை அடித்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், நடுவர் போட்டியை நிறுத்தினார்.

இதையடுத்து மழை நின்றதும், டக்வொர்த் லீவிஸ் முறையில் டார்கெட் 129 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி களமிறங்கியது.

முன்னதாக, சேலம் அணி சார்பில் கவுசிக் காந்தி அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார்.

புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் நெல்லை, சேலம் அணிகள் இருந்து வருகின்றன. இன்றைய போட்டியில் சேலம் அணி மிக பெரிய வெற்றி பெற்றால் டாப் 4 இடத்துக்கு முன்னேறும். இதுவே இந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி போட்டியாக உள்ளது.

இந்த போட்டிக்கு பின்னர் சேலம் மைதானத்தில் வரும் வாரத்துக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

நெல்லை அணி இதுவரை இந்த சீசனில் 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அத்துடன் இதுவரை சேலம் அணிக்கு எதிராக இரண்டு முறை விளையாடியிருக்கும் நெல்லை அணி, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சேலம் அணி இந்த சீசனில் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நெல்லை அணிக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பெறும்பட்சத்தில் சேலம் அணி டாப் 4 இடத்துக்கு முன்னேறலாம்.

இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமும், ஒரே சதமும் அடித்த வீரரான குருசாமி அஜிதேஷ் நெல்லை அணியில் உள்ளார். அத்துடன் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களில் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் சோனு யாதவ் விளையாடிய போட்டிகளில் அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மழை காரணமாக டிஎல்எஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதால் யார் ஜெயிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.