Neeraj Chopra: டைமண்ட் லீக் போட்டியில் முதலிடம் - தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Neeraj Chopra: டைமண்ட் லீக் போட்டியில் முதலிடம் - தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra: டைமண்ட் லீக் போட்டியில் முதலிடம் - தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2023 12:49 PM IST

Neeraj Chopra won the gold: சுவிட்சர்லாந்தில் நடக்கும் டைமண்ட் லீக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் இந்த ஆண்டுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்றது. இதில் நமது இந்திய வீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காகத் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்ட காரணத்தினால், பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்தார்.

ஓய்வு முடித்துக் கொண்ட பிறகு தொடர்ச்சியாக நீரஜ் சோப்ரா பயிற்சி மேற்கொண்டார். பின்னர் தற்போது நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்றார்.

தற்போது லாசானே நகரில் நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா 87.66 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியன் வைப்பர் என்பவர் இரண்டாவது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் மூன்றாவது இடமும் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு இதே போட்டியில் 88.44 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார். இந்தப் பதக்கத்தோடு சேர்த்து நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் போட்டியில் இரண்டாவது முறை தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.