National Shotgun Selection: தேசிய ஷாட்கன் செலக்ஷனில் தமிழக வீரர் பிருத்விராஜ் வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  National Shotgun Selection: தேசிய ஷாட்கன் செலக்ஷனில் தமிழக வீரர் பிருத்விராஜ் வெற்றி

National Shotgun Selection: தேசிய ஷாட்கன் செலக்ஷனில் தமிழக வீரர் பிருத்விராஜ் வெற்றி

Manigandan K T HT Tamil
Jun 19, 2023 05:12 PM IST

Prithviraj Tondaiman: ஹை-ஸ்கோரிங் ஆடவர் ட்ராப் தகுதிச்சுற்றில் பிருத்விராஜ், 121 புள்ளிகளை பெற்றார். டெல்லி ஃபகத் சுல்தான் 122 புள்ளிகளை வென்றார்.

பிருத்விராஜ் தொண்டைமான்
பிருத்விராஜ் தொண்டைமான் (@ians_india)

பிருத்விராஜ் தொண்டைமான் சிக்ஸ்-மேன் 50-ஷாட் ஃபைனலில் 46 ஷாட்களை பிருத்விராஜ் பெற்றார். ராஜேஸ்வரி குமாரி 48 ஹிட்களை பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் இப்போட்டியில் வெற்றி வாகை சூடினர்.

ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ட்ராப் டிரையல்களில் முறையே குஜராத்தின் பக்தியார் உதின் முகமது முஸாஹித் மாலேக் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சபீரா ஹரிஸ் ஆகியோர் தகுதி பெற்றனர்.

ஹை-ஸ்கோரிங் ஆடவர் ட்ராப் தகுதிச்சுற்றில் பிருத்விராஜ், 121 புள்ளிகளை பெற்றார். டெல்லி ஃபகத் சுல்தான் 122 புள்ளிகளை வென்றார்.

மகளிருக்கான ட்ராப் பிரிவில் மத்தியப் பிரதேச வீராங்கனை நீரு 5 சுற்று முடிவில் 112 புள்ளிகளுடன் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார்.

சீனியர் வீரர் ஷகுன் சௌத்ரி அதே ஸ்கோரில் இரண்டாவது இடத்தில் இருந்தார், ஆனால் ஷூட்-ஆஃபில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சபீராவுக்கு எதிரான ஷூட்-ஆஃப் வெற்றிக்குப் பிறகு ராஜேஸ்வரி 111 ஸ்கோருடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா கீர், இறுதிப் போட்டியில் 43 ஹிட்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இருப்பினும் இறுதிப் போட்டியில் ராஜேஸ்வரி வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.