Asian Para Games : பாரா ஆசிய விளையாட்டு போட்டி - பேட்மிண்டனில் தங்கம் வென்ற தமிழச்சி!
பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாரா ஆசிய விளையாட்டில் மகளிருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியா-சீனா நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-0 என்ற செட் கணக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான துளசிமதி வெற்றிபெற்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 22ஆவது தங்கம் ஆகும்.
ஆசிய போட்டிகள் நடைபெற்ற சீனாவில் ஹாங்சோ நகரில் தற்போது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக 17 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் என்று 303 பேர் அடங்கிய இந்திய குழு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 4 நாட்கள் போட்டிகளின் முடிவில் 18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 82 பதக்கங்களை வென்றிருந்தனர். இந்த நிலையில் 5ஆவது நாளான இன்று மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்னையை எதிர்கொண்ட துளசிமதி முருகேசன் 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார். குறிப்பாக இரண்டாவது செட்டில் 5-2 என்ற பின் தங்கியிருந்த சூழலில், கடைசி நேரத்தில் அட்டாக் செய்து அபார வெற்றியை பதிவு செய்தார். இந்த வெற்றியை முன்னிட்டு, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்