தமிழ் செய்திகள்  /  Sports  /  Mumbai Odisha Won Ultimate Kho Kho Yesterdays Match

Ultimate Kho Kho: அல்டிமேட் கோ கோ நேற்றைய ஆட்டத்தில் மும்பை, ஒடிஸா அணிகள் வெற்றி

Manigandan K T HT Tamil
Jan 08, 2024 11:12 AM IST

மற்றொரு ஆட்டத்தில் ஒடிஸா ஜாகர்நட்ஸ் 35-27 என்ற கணக்கில் தெலுங்கு யோத்தாஸை ஜெயித்தது.

ஒடிஸா-தெலுங்கு யோத்தாஸ் இடையே நடந்த பரபரப்பான ஆட்டம்
ஒடிஸா-தெலுங்கு யோத்தாஸ் இடையே நடந்த பரபரப்பான ஆட்டம் (@ultimatekhokho)

ட்ரெண்டிங் செய்திகள்

மற்றொரு ஆட்டத்தில் ஒடிஸா ஜாகர்நட்ஸ் 35-27 என்ற கணக்கில் தெலுங்கு யோத்தாஸை ஜெயித்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு கட்டாக்கில் 27வது ஆட்டத்தில் தெலுங்கு யோத்தாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளும், 28வது ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ்-ராஜஸ்தான் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் மோதுகின்றன.

இந்தப் போட்டிகள் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதல் அல்டிமேட் கோ கோ சீசன் 2 போட்டிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 13ம் தேதி பைனல் நடைபெறவுள்ளது.

அல்டிமேட் கோ கோ, இந்தியாவின் முதல் தொழில்முறை Kho Kho லீக் ஆகும். அமித் பர்மன் அவர்களால் இந்திய Kho Kho Federation of India (KKFI) உடன் இணைந்து இந்த லீக் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ கோவை ஒரு தொழில்முறை கட்டமைப்பிற்குள் சந்தைப்படுத்துதல் மற்றும் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது இந்தியாவின் சொந்த உள்நாட்டு விளையாட்டை முன்னணிக்கு கொண்டு வருவதையும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு லீக்காக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ லீக் பழமையான இந்திய விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை இந்தியா மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவும் பாடுபடுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்