தமிழ் செய்திகள்  /  Sports  /  Ms Dhoni Has Successfully Undergone Knee Surgery In Mumbai

MS Dhoni: எப்படி இருக்கிறார் தோனி? - முழங்காலில் அறுவை சிகிச்சை முடிந்தது!

Karthikeyan S HT Tamil
Jun 01, 2023 09:40 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை செய்யப்பட்டுள்ளது.

எம்.எஸ். தோனி
எம்.எஸ். தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

16-வது ஐபிஎல் சீசன் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட போட்டிகளின் போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட அவர், காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். போட்டிகளில் பேட்டிங் செய்யும்போது ரன் எடுக்க ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியவுடன் புதன்கிழமை மும்பை சென்ற எம்எஸ் தோனி அங்குள்ள பிரபல கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று அவருக்கு கோகிலாபென் மருத்துவமனையில் இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்துள்ள சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், "சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் வியாழக்கிழமை வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐபிஎல் 2023 சீசன் முழுக்க 16 போட்டிகளில் விளையாடிய எம்எஸ் தோனி 12 இன்னிங்ஸில் பேட் செய்து 8 போட்டிகளில் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

மொத்தம் 57 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்கள் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோராக 32 நாட் அவுட் உள்ளது. 182.45 என சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் தோனி, 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்