TNPL Most Wickets: இந்த சீசன் டிஎன்பிஎல்-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 பவுலர்ஸ்
TNPL 2023: இதுவரை அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட்டை பார்ப்போம்.
டிஎன்பிஎல் திருவிழா சிறப்பாக தொடங்கி நடந்து வருகிறது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்பட 8 அணிகள் இந்த சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
ஐபிஎல் போன்ற பல திறமையான வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை அதிக விக்கெட்டுகளை எடுத்த டாப் 5 பவுலர்ஸ் லிஸ்ட்டை பார்ப்போம்.
லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான், 9 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இவர் 5 ஆட்டங்களில் விளையாடி 12 ஓவர்கள் வீசியிருக்கிறார். இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரது பெஸ்ட் பவுலிங் 20/3. மொத்தம் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
சரவண குமார்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைச் சேர்ந்த சரவண குமார், 4 ஆட்டங்களில் விளையாடி, 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இவரது பெஸ்ட் பவுலிங் 22/3. மொத்தம் 113 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்.
பொய்யாமொழி
நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலர் பொய்யாமொழி, 5 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்டுகளை சுருட்டியிருக்கிறார். இவர் மொத்தம் 16 ஓவர்கள் வீசி 102 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 25/3.
வருண் சக்கரவர்த்தி
திண்டுக்கல் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரரான வருண் சக்கரவர்த்தி 4 ஆட்டங்களில் விளையாடி, 115 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவரது பெஸ்ட் 21/3.
சுபோத் பதி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம்பிடித்துள்ள சுபோத் பதி, 4 ஓவர்கள் வீசி, 103 ரன்களை விட்டுக் கொடுத்து, 7 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவரது பெஸ்ட் 19/3.
இன்னும் ஆட்டங்கள் இருக்கின்ற நிலையில், இந்தப் புள்ளி விவரங்கள் மாறக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும். 7வது சீசன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை லைக்கா கோவை கிங்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.
Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்