Mohammed Siraj: பறவை போல் பறந்து ரிட்டர்ன் கேட்ச் பிடித்த சிராஜ் - வைரல் விடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் பறந்தவாறு ஒற்றை கையில் பிடித்த அற்புத கேட்சின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிகாவிலுள்ள ரோசோ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைதத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா விக்கெட் இழப்பின்ற 80 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்கள் திணறடித்து வந்தனர். குறிப்பாக ஸ்பின்னர்களான அஸ்வின் - ஜடேஜா கூட்டணி அடுத்தடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் இருவரும் இணைந்து 8 விக்கெட் வீழ்த்திய நிலையில், அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பிளாக்வுட், ஜடேஜா பவுலிங்கில் முகமது சிராஜ் கேட்ச் பிடிக்க அவுட்டானார். ஜடேஜாவின் பந்தில் நேராக லாப்ட் ஷாட் ஆடினார் பிளாக்வுட். உயரமாக சென்ற அந்த பந்து நீண்ட தூரம் செல்லாத நிலையில் மிட் ஆஃப் பீல்டிங் பொஷிசனில் இருந்த சிராஜ் ஓடிப்போய் பறந்தவாறு ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.
ஆக்ரோபாடிக் செய்யும் விதமாக அமைந்திருந்த சிராஜின் இந்த கேட்ச் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பவுலிகிலும் அசத்திய முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஜேசன் ஹோல்டர் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் சிராஜ், 25 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முகமது ஷமி இல்லாத நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பிரதான வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார் முகமது சிராஜ்.
டாபிக்ஸ்