Mohammed Amir: ஐபிஎல் விளையாட பலே திட்டம்..! குடியுரிமை மாற்ற தயாராகும் பாகிஸ்தான் மிரட்டல் பவுலர்
இன்னும் ஒரு ஆண்டு மட்டும் இங்கிலாந்திலேயே இருந்தால் அந்நாட்டு குடியுரிமை பெற தகுதியுடைவராவார் பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமிர். இதனால் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தாலே அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்படும்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 17 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி பாகிஸ்தான் அணி முதல் முறையாக வென்ற டி20 உலகக் கோப்பை தொடரில் முக்கிய பவுலராக திகழ்ந்தார்.
இதன்பின்னர் 2010இல் ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய முகமது ஆமிர், சிறை, சில ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் களமிறங்கி 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெல்வதற்கு காரணமாக அமைந்தார். 2020இல் தனது 28வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஆமிர்.
அதன் பிறகு இங்கிலாந்தில் தங்கி உள்ள முகமது அமீர் அங்கு உள்ள கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது முகமது அமீர் பிரிட்டன் குடியுரிமை பெற இன்னும் ஒரு ஆண்டு தான் தேவைப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் எல்லாம் அவர் இங்கிலாந்து குடிமகனாக மாறிவிடுவார்.
இதையடுத்து 31 வயதாகும் ஆமிர், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற பெண்னை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அந்நாட்டு குடியுரிமை பெற இருக்கிறார்.
இதன் மூலம் அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன் பிறகு முகமது ஆமிர் இங்கிலாந்து அணிக்காக கூட விளையாடும் வாய்ப்பு உருவாகலாம். மிக முக்கியமாக இங்கிலாந்து குடிமகனாக அவர் மாறிவிட்டால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க எந்த தடையும் இல்லை. இதனால் அவர் ஐபிஎல் போட்டிகள் விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முகமது ஆமிர் கூறியதாவது:
"இங்கிலாந்து அணிக்காக விளையாடும் எண்ணம் எனக்கு இதுவரை இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து எந்த அணி உரிமையாளர்களிடம் பேசவில்லை.
ஐபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது." என்றார்.
ஐபிஎல் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்களான ஷாகித் அப்ரிடி, சோயிப் அக்தர், சோயிப் மாலிக் உள்பட சிலர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதன் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வீரரான அசார் முகமது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2012, 2013 சீசன்களில் விளையாடினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்