Mike Tyson: 20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன்!
1984 லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக்கேல் ஜெரார்டு டைசன் (Michael Gerard Tyson) பிறந்த நாள் இன்று (ஜூன் 30).
"தி பேடஸ்ட் மேன் ஆன் தி பிளானட்" என அழைக்கப்பட்டவர். 1987 முதல் 1990 வரை தோல்வியே பெறாது வின்னராக இருந்தார்.
இதில் 19 போட்டிகளில் நாக் அவுட்டில் வெற்றி பெற்றார். 20 வயதில் தனது முதல் பட்டத்தை வென்றதன் மூலம் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் குத்துச்சண்டை வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
டபிள்யூபிஏ , டபிள்யூபிசி மற்றும் ஐபிஎஃப் பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்ற முதல் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்.
1990இல் பஸ்ட்டர் டக்ளசிடம் நாக் அவுட்டில் இவர் தோல்வியுற்றது குத்துச்சண்டை வரலாற்றில் மிகப் பெரிய தோல்விகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிறப்பு
மைக்கேல் ஜெரார்டு டைசன் 1966ம் ஆண்டு ஜூன் 30 அன்று நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள ஃபோர்ட் கிரீனில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.
இவருக்கு ரோட்னி எனும் மூத்த சகோதரரும் டெனிஸ் என்ற மூத்த சகோதரியும் உள்ளனர். டைசன் 1981 மற்றும் 1982 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். 1981இல் ஜோ கோர்டெசை வீழ்த்தினார். 1982இல் கெல்டன் பிரவுனை வீழ்த்தினார். 1984 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த போட்டியில் ஜொனாதன் லிட்டில்சை வீழ்த்தி டைசன் தங்கப் பதக்கம் வென்றார்.
1984 லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்