HT Sports Special: கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரின் முதல் நிர்வாண ஓட்டம் - மொக்கை ஆஷஷ் போட்டியை சுவாரஸ்யமாக்கிய சம்பவம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரின் முதல் நிர்வாண ஓட்டம் - மொக்கை ஆஷஷ் போட்டியை சுவாரஸ்யமாக்கிய சம்பவம்

HT Sports Special: கிரிக்கெட் மைதானத்தில் ரசிகரின் முதல் நிர்வாண ஓட்டம் - மொக்கை ஆஷஷ் போட்டியை சுவாரஸ்யமாக்கிய சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 04, 2023 06:20 AM IST

விளையாட்டு போட்டிக்கு நடுவே இடையூறு செய்யும் விதமாக நிர்வாண ஓட்டம் ஓடுவது, குறுக்கு புகும் நபர்களை ஸ்ட்ரீக்கர் என்கிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டில் சேட்டை செய்த முதல் ஸ்ட்ரீக்கரும், அவர் செய்த சம்பவத்தின் பின்னணியும் பார்க்கலாம்.

கிரிக்கெட் விளையாட்டில் முதல் முறையாக நிர்வாண ஓட்டம் நடைபெற்ற நாள் இன்று
கிரிக்கெட் விளையாட்டில் முதல் முறையாக நிர்வாண ஓட்டம் நடைபெற்ற நாள் இன்று

அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டின் இடையே ரசிகர் ஒருவர், நிர்வாணமாக மைதானத்தில் துள்ளி குதித்து ஓடிய முதல் சம்பவம் இதே நாளான ஆகஸ்ட் 4, 1975இல் நடந்துள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தின் நடைபெற்ற இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஷ் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஏஞ்சலோ என்பவர் இப்படியொரு படுபாதக செயலில் ஈடுபட்டார்.

இங்கிலாந்தின் கப்பல் ஒன்றில் சமையல்காரராக இருந்து மைக்கேல் ஏஞ்சலோ, பிட்சில் நிர்வாணமாக ஓடி, துள்ளி குதித்து போட்டிக்கு இடையூறு செய்த முதல் நபராக உள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் பாப் உல்மர் - ஆலன் நாட் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக இருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென வெறும் கருப்பு சாக்ஸ் மற்றும் ஷூ மட்டும் அணிந்தவாறு ஆடை இல்லாமல் நிர்வாணமாக ஒரு நபர் மைதானத்துக்குள் ஓடி வந்த பட்சில் இருந்த இரண்டு ஸ்டம்களையும் தாண்டி வித்தை காட்டினார்.

இவரது சேட்டையாக கிரிக்கெட் வீரர்கள் உள்பட மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்களை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளார். பலரும் இவரது செய்கையை கண்டு மகிழ்ச்சி கூப்பாடும் வெளிப்படுத்தினர்.

சர்ப்ரைஸாக மைக்கேல் ஏஞ்சலோ செய்த செயலை எந்த வொரு வீரரும், மைதானத்தில் இருந்த பாதுகாவலரும் தடுக்கவில்லை. மாறாக அவர் தனது லீலைகளை முடித்த பின் தனது இடத்துக்கு வந்தவுடன் கைது நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். பின்னர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு

10 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே அளவு பணத்தை தான் அவர் நிர்வாணமாக ஓடுவதற்காக பெட் கட்டி சம்பாதித்தது பின்னாளில் தெரியவந்தது மற்றொரு சர்ப்ரைஸ் தகவலாக அமைந்தது. இந்த சம்பவம் குறித்து பின்னாளில் மைக்கேல் ஏஞ்சலோ அளித்த பேட்டியில், " அன்றைய நாளில் ஆட்டம் மிகவும் மொக்கையாக போய் கொண்டிருந்தது. அப்போது எனக்கும், ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கும் இடையே கேலி பேச்சுகளை தொடர்ந்தன. அப்போது தான் நான் நிர்வாண ஓட்டம் செய்து கலகலப்பூட்ட முயற்சித்தேன்" என்றார்.

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் நுழைவதென்பது இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் இவரைபோல் வித்தியாச முயற்சியில் ஈடுபடும் ரசிகர்கள் இந்தியாவில் இல்லாவிட்டாலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நூற்றாண்டில் இதுபோன்றதொரு சம்பவமாக 2008-09ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிபி தொடர் ஒரு நாள் போட்டியின் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மறைந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை நோக்கி ஓடி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டத்து. சிக்கென உடல் வாகு கொண்ட சைமண்ட்ஸ் மோதியதில் மைதானத்தினுள் ஓடி வந்த நிர்வாண நபர் பறந்து கீழே விழுந்தார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஷஷ் கிரிக்கெட் தொடரிலும் லார்ட்ஸ் மைதானத்தில் Just Stop Oil போராட்ட குழுவை சேர்ந்த நபர் போட்டியின் நடுவே உள்ளே புகுந்து தான் கொண்டு வந்திருந்த ஒரு வகையான ரசாயணத்தை வைத்து மைதானத்தை சேதப்படுத்த முயற்சித்தார். இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவரை குண்டுக்கட்டாக தனது தோளில் சுமந்து தூக்கி சென்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நகைப்பை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.