ICC: உலகக் கோப்பை 2023 தகுதிச்சுற்றில் அதிக ஸ்கோர் பதிவு செய்த வீரர் யார் தெரியுமா?
நிஸங்கா (இலங்கை) எட்டு போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 69.50 சராசரியுடன் 417 ரன்கள் விளாசியிருக்கிறார்.
உலகக் கோப்பை 2023 தகுதிச் சுற்றுக்கான அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 8 அணிகள் தேர்வாகியிருந்த நிலையில், எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்தது.
இந்தப் போட்டியில் பைனலுக்கு நெதர்லாந்தும், இலங்கையும் முன்னேறியது. இதில், இலங்கை சாம்பியன் ஆனது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு இந்த 2 அணிகளும் முன்னேறின.
இந்நிலையில், ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 அணியில் இலங்கை மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த தலா மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடக்க வீரர் பதும் நிஸங்காவுடன் பவுலர்கள் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹிஷ் தீக்ஷனா ஆகியோரும், நெதர்லாந்தின் ஆல்-ரவுண்டர்களான விக்ரம்ஜித் சிங் மற்றும் பாஸ் டி லீட் மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஐசிசி தேர்ந்தெடுத்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயும் தொடர் நாயகன் சீன் வில்லியம்ஸ் உட்பட மூன்று வீரர்களை கொண்டுள்ளது. மீதமுள்ள இரண்டு பிளேயர்கள் ஸ்காட்லாந்து அணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிஸங்கா (இலங்கை) எட்டு போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 69.50 சராசரியுடன் 417 ரன்கள் விளாசியிருக்கிறார்.
விக்ரம்ஜித் சிங் (நெதர்லாந்து) 40.75 சராசரியுடன் 326 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
பிராண்டன் மெக்முல்லன் (ஸ்காட்லாந்து) 8 போட்டிகளில் 52.00 சராசரியுடன் 364 ரன்கள், 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் பதிவு செய்தார்.
பாஸ் டி லீட் (நெதர்லாந்து) 7 போட்டிகளில் 47.50 சராசரியுடன் 285 ரன்கள், 22.13 சராசரியுடன் 15 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.
சியான் வில்லியம்ஸ் (ஜிம்பாப்வே) 7 போட்டிகளில் 100.00 சராசரியுடன் 600 ரன்கள், 3 சதம், 2 அரைசதம், 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் இவர் தான்.
பாஸ் டி லீட் (நெதர்லாந்து) 7 போட்டிகளில் 47.50 சராசரியுடன் 285 ரன்கள், ஒரு சதம், 22.13 சராசரியுடன் 15 விக்கெட்டுகளையும், சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே) 7 போட்டிகளில் 65.00 சராசரியுடன் 325 ரன்கள் ஒரு சதம், 22.13 சராசரியில் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் (நெதர்லாந்து) 8 போட்டிகளில் 62.80 சராசரியுடன் 4 அரைசதங்களுடன் 314 ரன்கள்-வனிந்து ஹசரங்கா (இலங்கை) 12.90 சராசரியில் 22 விக்கெட்டுகள்-மஹிஷ் தீக்ஷனா (இலங்கை) 12.23 சராசரியில் 21 விக்கெட்டுகள்-கிறிஸ் சோல் (ஸ்காட்லாந்து) 25.00 சராசரியில் 11 விக்கெட்டுகள்-ரிச்சர்ட் என்கராவா (ஜிம்பாப்வே) 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
ஜிம்பாப்வேயில் 2 சதங்கள் அடித்த பதும் நிஸங்கா, 417 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார்.
வெறும் 12.90 சராசரியுடன் 22 டிஸ்மிஸ்களுடன் போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றார்.
மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய பின்னர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார் ஹசரங்கா.
டாபிக்ஸ்