HBD Manoj Kumar: காமன்வெல்த்தில் தங்கம் வென்று அசத்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாரின் பிறந்த நாள்
மனோஜ் குமார் 2008 இல் நடப்பு சாம்பியனான சோம் பகதூர் புனை தோற்கடித்ததன் மூலம் முதல் முறையாக தேசிய சாம்பியனானார்.

இந்திய குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் டிசம்பர் 10, 1986 ம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்த நாளான இன்று, அவர் பற்றி அறிந்து கொள்வோம். 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் light welterweight பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள ராஜவுண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை ஷேர் சிங் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், அவரது தாயார் ஒரு இல்லத்தரசி. மனோஜ் குமார் ஆரம்பத்தில் ஒரு தடகள வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அதே நேரத்தில் அவரது மூத்த சகோதரர் ராஜேஷ் குமார் ராஜவுண்ட் ஒரு வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீரராக இருந்தார். ராஜேஷ் குமார் ராஜவுண்ட் பல்கலைக்கழக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றபோது அவர் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தார். இருப்பினும் அவர் புறக்கணிக்கப்பட்டார், எனவே அவரது தம்பியை குத்துச்சண்டைக்கு கொண்டு வர முடிவு செய்தார்.
அவர் மனோஜ் குமாருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார், மேலும் அவரது இளைய சகோதரர் முகேஷ் குமாரை ஜூடோவில் இருந்து குத்துச்சண்டைக்கு மாற்றி மனோஜ் குமாரின் ஸ்பாரிங் பார்ட்னராக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மூவரும் தங்கள் கிராமமான ராஜவுண்டில் இருந்து கைதலுக்குப் பயிற்சிக்காகப் பயணம் செய்தனர். ஆரம்ப காலத்தில் பழைய சைக்கிள் டியூப்கள் மூலம் பயிற்சி பெற்றனர்.