T20I Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை! 7 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலரான மலேசியா வீரர்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை எந்தவொரு பவுலரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் மலேசியா வீரர் சியாஸ்ருல் இட்ரஸ்.
2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான ஆசிய மண்டல பி பிரிவு தகுதி சுற்று போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் மலேசியா - சீனா அணிகள் மோதின. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த சீனா அணி மலேசியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 11.2 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆல்அவுட்டானது. மலேசியா அணி 4.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு இந்த இலக்கை எடுத்துள்ளனர். இந்த போட்டியில் 6 சீனா பேட்ஸ்மேன்கள் டக்அவுட்டானார்கள்.
மலேசியா அணியை சேர்ந்த சியாஸ்ருல் இட்ருஸ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை புரிந்தார். வெறும் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் நைஜீரியா கிரிக்கெட் வீரர் பீட்டர் அஹோ சாதனையான 5 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங்காக அமைந்தது. சியாஸ்ருல் இட்ருஸ் 7 விக்கெட் வீழ்த்தியது சர்வதேச டி20 கிரிக்கெட் மட்டுமில்லாமல்,ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலிங்காக அமைந்துள்ளது.
32 வயதாகும் சியாஸ்ருல் இட்ருஸ் மித வேக பந்து வீச்சாளராக உள்ளார். இதுவரை இவர் 23 டி20 போட்டிகளில் விளையாடி இருப்பதுடன் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக உள்ளார்.
இதுவரை எந்தவொரு வீரரும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 6 விக்கெட்டுக்கு மேல் எடுத்ததில்லை.
ஐசிசியின் முழு உறுப்பினர் அணியாக இருந்து வரும் தீபக் சஹார், சர்வதேச கிரிக்கெட்டில் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது மூன்றாவது சிறந்த பவுலங்காக உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளுக்கு மேல் 12 பவுலர்கள் எடுத்துள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து தீபக் சஹார், யஸ்வேந்திர சாஹல் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் மலேசியா பவுலரான சியாஸ்ருல் இட்ருஸும் இடம்பிடித்துள்ளார்.
நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த பெர்டிரிக் ஓவர்டைக், கடந்த 2021இல் பிரான்ஸ் அணிக்கு எதிராக 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒட்டு மொத்த ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் சிறந்த பவுலிங்காக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்