TNPL: சேலம் 4வது தோல்வி.. கோவை கிங்ஸ் அபார வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl: சேலம் 4வது தோல்வி.. கோவை கிங்ஸ் அபார வெற்றி

TNPL: சேலம் 4வது தோல்வி.. கோவை கிங்ஸ் அபார வெற்றி

Manigandan K T HT Tamil
Jun 27, 2023 10:34 PM IST

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடியது. ஆனால், ஆரம்பம் முதலே சொதப்பியது.

பந்தை விளாசிய சேலம் வீரர்
பந்தை விளாசிய சேலம் வீரர் (@TNPremierLeague)

இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது கோவை கிங்ஸ்.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடியது. ஆனால், ஆரம்பம் முதலே சொதப்பியது.

அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர். அதிகபட்சமாக சன்னி சாந்து மட்டும் 2 சிக்ஸர்களை விளாசி 29 ரன்களை எடுத்தார். ஆனால், அவரும் ஆட்டமிழந்ததை அடுத்து சேலம் அணியின் நம்பிக்கை ஏறக்குறைய குறைந்து போனது.

கேப்டன் அபிஷேக் தன்வர் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.

அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த சேலம் அணி, 19 ஓவர்களில் 120 ரன்களில் சுருண்டது. கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது 19வது லீக் ஆட்டம் ஆகும். டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் கோவை கிங்ஸ் அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர் எஸ்.சுஜய், ஜே.சுரேஷ் குமார். சுரேஷ் குமார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாய் சுதர்ஷன் களமிறங்கினார். சுஜய், சாத் சுதர்ஷன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

சுஜய் 44 ரன்களிலும், சுதர்ஷன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதீக் உர் ரகுமான் நிதானமாக விளையாடினார்.

பின்னர் வந்த ராம் அரவிந்த் 22 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்த சீசனில் அதிவேகமாக அரை சதம் விளாசியவர் ராம் அரவிந்த் தான்.

இவ்வாறாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 199 ரன்களை கோவை குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடியது.

Fancode செயலியிலும் டிஎன்பில் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.