TNPL Qualifier 1: ஃபைனலுக்கு முன்னேறப் போகும் முதல் அணி எது?-இன்று முதலாவது தகுதிச்சுற்று
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Qualifier 1: ஃபைனலுக்கு முன்னேறப் போகும் முதல் அணி எது?-இன்று முதலாவது தகுதிச்சுற்று

TNPL Qualifier 1: ஃபைனலுக்கு முன்னேறப் போகும் முதல் அணி எது?-இன்று முதலாவது தகுதிச்சுற்று

Manigandan K T HT Tamil
Jul 07, 2023 06:40 AM IST

Salem: ஜெயிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி எலிமினேட்டர் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் குவாலிஃபையர் 2வது சுற்றில் மோதும்.

கிரிக்கெட் ரசிகர்கள், கோவை கேப்டன் ஷாருக் கான்
கிரிக்கெட் ரசிகர்கள், கோவை கேப்டன் ஷாருக் கான் (TNPL)

இன்று முதலாவது குவாலிஃபையர் சுற்று நடக்கிறது. சேலத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லைக்கா கோவை கிங்ஸ், இரண்டாவது இடத்தில் இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.15 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இதில் ஜெயிக்கும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி எலிமினேட்டர் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் குவாலிஃபையர் 2வது சுற்றில் மோதும்.

அதில் ஜெயிக்கும் அணி, பைனலில் குவாலிஃபையர் 1-இல் ஜெயித்த அணியை எதிர்கொள்ளும்.

லைகா கோவை கிங்ஸ் அணி இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கோவை கிங்ஸ் அணி சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

சுரேஷ்குமார் (64), சச்சின் (67), ஷாருக்கான் (53) ஆகியோரின் அரைசதத்தால் கோவை கிங்ஸ் அணி 208 ரன்கள் குவித்தது. பின்னர் பந்து வீச்சாளர்கள் அதிரடியாக விளையாடி 164 ரன்கள் எடுத்திருந்த மதுரை பாந்தர்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை தோற்கடித்தது.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பாட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்பார்ட்டன்ஸ் அணியை 160/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். கேப்டன் பாபா இந்திரஜித் 50 பந்துகளில் 83* ரன்கள் குவித்து கடைசி ஓவரில் 7 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

சேலம் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளம் மெதுவாக உள்ளது. பந்து வீசும்போது மேற்பரப்பில் சற்று பிடிப்பு இருக்கும். பேட்ஸ்மேன்கள் தங்கள் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். கொஞ்சம் நிலைத்து நின்ற பிறகு, அவர்கள் புகுந்து விளாசலாம்.

திண்டுக்கல் வீரர் ஷிவம் சிங்
திண்டுக்கல் வீரர் ஷிவம் சிங் (TNPL)

மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

லைக்கா கோவை கிங்ஸ்

எஸ்.சுஜய், ஜே.சுரேஷ்குமார் (விக்கெட் கீப்பர்), பி.சச்சின், ராம் அரவிந்த், அதீக் யு.ரஹ்மான், யு.முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), கே.கவுதம் தாமரை கண்ணன், மணிமாறன் சித்தார்த், ஜடாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன் யுதீஸ்வரன்.

திண்டுக்கல் டிராகன்ஸ்

விமல் குமர், ஆதித்யா கணேஷ், பாபா இந்திரஜித் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), பூபதி குமார், சுபோத் பாட்டி, சி.சரத்குமார், பி.சரவண குமார், எம்.மதிவண்ணன், வருண் சக்கரவர்த்தி, ஆஷிக் ஸ்ரீனிவாஸ்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.