தமிழ் செய்திகள்  /  Sports  /  Lionel Messi Scores Sensational Second-half Brace In 5 Minutes On Mls Match Against Orlando City

Lionel Messi: 5 நிமிடங்களில் 2 கோல்கள்..! எம்எல்எஸ் லீக்கில் அணியை சூப்பர் வெற்றி பெற செய்த மெஸ்ஸி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 03, 2024 04:55 PM IST

மேஜர் லீக் சாக்கர் கால்ப்ந்து லீக் தொடரில் வெறும் 5 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார் ஸ்டார் வீரரான லியோனல் மெஸ்ஸி.

எம்எல்எஸ் கால்பந்து தொடர் ஓர்லாண்ட் சிட்டி அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி
எம்எல்எஸ் கால்பந்து தொடர் ஓர்லாண்ட் சிட்டி அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது ஆட்டத்தால் இண்டர் மியாமி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளும் எதிர்பார்ப்பு மிக்கவையாகவே இருந்து வருகிறது. இதையடுத்து இண்டர் மியாமி - ஓர்லாண்டோ சிட்டி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

இதில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி 5-0 என்ற கோல் கணக்கில் சூப்பரான வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஸ்டார் வீரர் மெஸ்ஸி 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்த இருகோல்களும் அணியின் கூட்ட முயற்சியாக அமைந்த நிலையில், அவர் அடித்த கோல் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

முன்னதாக, ஆட்டத்தின் 4,11,29 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்த இண்டர் மியாமி முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 56, 62 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்த மெஸ்ஸி, அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்