Lionel Messi: பீட்சாவை வைத்து மெஸ்ஸியை பங்கமாக கலாய்த்த பிரபல கால்பந்து கிளப் அணி! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lionel Messi: பீட்சாவை வைத்து மெஸ்ஸியை பங்கமாக கலாய்த்த பிரபல கால்பந்து கிளப் அணி! ஏன் தெரியுமா?

Lionel Messi: பீட்சாவை வைத்து மெஸ்ஸியை பங்கமாக கலாய்த்த பிரபல கால்பந்து கிளப் அணி! ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Sep 18, 2023 02:57 PM IST

மெஸ்ஸி பகிர்ந்த பிட்சா போன்று மற்றொரு பிட்சா புகைப்படத்தை பகிர்ந்து அவரை பங்கமாக கலாய்த்துள்ளது அட்லாண்டா யுனைடெட் கிளப் அணி.

ஸ்டார் வீரர் லியோனல் மெஸ்ஸியை கலாய்த்த பிரபல கால்ப்ந்து கிளப் அணி
ஸ்டார் வீரர் லியோனல் மெஸ்ஸியை கலாய்த்த பிரபல கால்ப்ந்து கிளப் அணி

மேஜர் சாக்கர் லீக் கால்ப்ந்து போட்டியில் அட்லாண்டா அணி 5-2 என்ற கோல் கணக்கில் இண்டர் மிலன் அணியை வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை. அவருக்கு இண்டர் மியாமி நிர்வாகம் ஓய்வு அளித்த நிலையில், மெஸ்ஸி விளையாடாத போட்டியில் தோல்வியை சந்தித்திருப்பதுடன் பாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த போட்டியில் விளையாடாத மெஸ்ஸி மியாமியில் உள்ள பிரபல ரெஸ்ட்ராண்டில் பிட்சா சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட பிட்சாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பிட்சாவை போல் மற்றொரு பீட்சாவை பகிர்ந்த அட்லாண்டா அணி நிர்வாகம், சில தக்காளி துண்டுகளை வைத்து ஆங்கில எழுத்தான 'L' என்பதை வடிவமைத்து, இண்டர் மிலன் தோல்வி அடைந்திருப்பதை அவ்வாறு கிண்டலடித்துள்ளனர். அத்துடன் தங்களது பதிவில், " உங்கள் பயணத்தில் இந்த பிட்சாவை சாப்பிட்டு மகிழுங்கள்" எனவும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர்.

அட்லாண்டா அணிக்கு எதிரான பெற்ற தோல்வியால் மேஜர் சாக்கர் லீக்கில் ப்ளேஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி போல் அவருடன் பார்சிலோனா அணியில் விளையாட சக நட்சத்திர வீரருமான ஜோர்டி ஆல்பாவும் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

கடைசி ப்ளே ஆஃப் இடமான 9வது இடத்தை பிடித்திருக்கும் இண்டர் மியாமி, அந்த அணியை விட 6 புள்ளிகள் குறைவாக உள்ளது. இந்த தொடரில் இதுவரை விளையாடியிருக்கும் 8 வெற்றி, 15 தோல்வி, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது இண்டர் மியாமி அணி. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9