Lionel Messi: இது மட்டும் நடந்தால்.. ஐரோப்பாவிற்கு வெளியே மெஸ்ஸி விளையாடும் முதல் கிளப் அணி இதுதான்!
Football: மெஸ்ஸிக்கு தற்போது 35 வயதாகிறது. இதுவரை அர்ஜென்டீனா அணிக்காக 102 கோல்களை பதிவு செய்துள்ளார்.
பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜியிலிருந்து விலகினார் மெஸ்ஸி. அதைத் தொடர்ந்து, அவர் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த அணியின் ஆஃபரை நிராகரித்த மெஸ்ஸி, அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இன்டர் மியாமி அணியில் அவர் இணைவது உறுதியானால், ஐரோப்பாவுக்கு வெளியே அவர் விளையாடப்போகும் முதல் கிளப் அணியாக இதுவே இருக்கும்.
பிஎஸ்ஜி அணிக்காக இரு சீசன்களில் விளையாடியிருக்கும் மெஸ்ஸி மொத்தம் 32 கோல்களை பதிவு செய்திருக்கிறார். மேலும், 35 கோல்களை சக வீரர்கள் அடிப்பதற்கும் உதவியிருக்கிறார்.
லீக் போட்டிகளில் இதுவரை 496 கோல்களை பதிவு செய்துள்ள மெஸ்ஸி, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளினார்.
ஐரோப்பாவில் டாப் 5 லீக் போட்டிகளில் கோல் மழை பொழிந்தவராக மெஸ்ஸி திகழ்கிறார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணி பெரிய தொகையை அளிக்க முன்வந்தபோதிலும் அவர் அதை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்ஸி விடை பெற்றதும் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரசரவென குறைந்தது.
கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் அந்த கிளப் அணியை பின்தெடார்வதிலிருந்து பின்வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரராக பரவலாகக் கருதப்படும் மெஸ்ஸி அடுத்த எந்த கிளப் அணிக்காக விளையாடப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள கால்பந்து உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இவரது தலைமையிலான அர்ஜென்டீனா அணி சாம்பியன் ஆனது நினைவுகூரத்தக்கது. இதனால், இவருக்கான டிமான்ட் இன்னும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்