Lionel Messi Birthday: கனவுகளை விடாதே; ஆகாய அசுரன் மெஸ்ஸி பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Lionel Messi Birthday: கனவுகளை விடாதே; ஆகாய அசுரன் மெஸ்ஸி பிறந்தநாள் இன்று!

Lionel Messi Birthday: கனவுகளை விடாதே; ஆகாய அசுரன் மெஸ்ஸி பிறந்தநாள் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2023 06:20 AM IST

கால்பந்தின் மீது இனம் புரியாத காதல் உருவாக ஐந்தாவது வயதில் கிராண்டோலி என்ற கால்பந்து கிளப்பில் இணைந்தார். சிறு வயதில் மெஸ்ஸிக்கு கூச்சசுபாவம் அதிகம்; யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். யாராவது கோபப்பட்டால் கூட அவர்களுக்கு பதில் கொடுக்கமாட்டார்.

Lionel Messi Birthday: Argentina Football Star Lionel Messi Turns 36 today
Lionel Messi Birthday: Argentina Football Star Lionel Messi Turns 36 today

அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியா நகர்தான் மெஸ்ஸிக்கு சொந்த ஊர். தாய் செலியா பகுதி நேர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் தந்தை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். குடும்பத்தின் மூன்றாவது ஆண் குழந்தைதான் மெஸ்ஸி; வீட்டில் அனைவருக்குமே கால் விளையாட்டின் மீது அலாதி பிரியம்.

அப்பாவும் கால் பந்துகோச் என்பதால் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே பயிற்சியளிக்க ஆரம்பித்து விட்டார். Newell's Old Boys என்ற உள்ளூர் ஃபுட்பால் கிளப்பின் டி -ஷர்ட்டை உறவினர் ஒருவர் வாங்கிக்கொடுத்ததின் ஆரம்பம்தான் மெஸ்ஸியின் அசாத்திய கால்பந்து பயணத்தின் தொடக்கம். அதனைத்தொடர்ந்து கால்பந்தின் மீது இனம் புரியாத காதல் உருவாக ஐந்தாவது வயதில் கிராண்டோலி என்ற கால்பந்து கிளப்பில் இணைந்தார். சிறு வயதில் மெஸ்ஸிக்கு கூச்சசுபாவம் அதிகம்; யாரிடமும் அதிகமாக பேச மாட்டார். யாராவது கோபப்பட்டால் கூட அவர்களுக்கு பதில் கொடுக்கமாட்டார்.

சிறுவயதில் மெஸ்ஸியின் உயரம் 127 செ.மீ. கால் பந்து விளையாடுவதற்கு உயரம் தேவை. இதனால் ஏதாவது குழ்ந்தைக்கு மரபனு பிரச்சினை இருக்குமோ என பல மருத்துவமனைகள் ஏறி இறங்கினார் மெஸ்ஸியின் பெற்றோர். இறுதியில் அது ஹார்மோன் பிரச்சினை என்பது உறுதியானது. சிகிச்சைக்கு 900 டாலர் வரை செலவாகும் என்பது தெரியவர, அப்போதைய பார்சிலோனாவின் விளையாட்டுத்துறை இயக்குநர் கார்லெஸ் பார்சிலோனாவின் கிளப் அணிகளில் மெஸ்ஸி இணைந்து விளையாட சம்மதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மெஸ்ஸிக்கு உதவினார். அங்குதான் பார்சிலோ அணிக்கும் மெஸ்ஸிக்கும் இடையேயான பந்தம் உருவானது. ஸ்பெயினுக்கு பறந்தார்.

9 வயதிலேயே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று அசத்தினார். பார்சிலோனோ அணிக்காக அவர் விளையாடிய போது அவருக்கு கிடைத்த ஜெர்சி இலக்கம் 19. அப்போது 10 எண் ஜெர்சியை வைத்திருப்பவர் சிறந்த வீரர் என்ற எண்ணம் இருந்தது. 2008ம் ஆண்டு ரொனால்டினோ ஓய்வு பெற அவரிடம் இருந்த 10 ம் இலக்க ஜெர்சி மெஸ்ஸிக்கு கிடைத்தது. மெஸ்ஸி இடது கால் ஸ்டைலில் கோல் அடிக்கும் பழக்கம் கொண்டவர். 2012 ம் ஆண்டில் 91 கோல்களை அடித்து கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

700க்கும் மேற்பட்ட கோல்களை அடித்திருக்கும் மெஸ்ஸி கால்பந்தின் உயரிய விருதாக பார்க்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை பல முறை மெஸ்ஸி வென்று இருக்கிறார். இவரின் போட்டியாக பார்க்கப்படுவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர்களுக்கு இடையேயான போட்டியானது கால்பந்து உலகில் உச்சபட்ச கவனத்துடன் கண்காணிக்கப்படுகிறது. மெஸ்ஸி கடந்த 2017 ம் ஆண்டு அன்டோனெல்லா ரோகுஸ்ஸோவை திருமணம் செய்து கொண்டார். மாடல் அழகியான இவர் சில தொழில்களையும் செய்து வருகிறார். இந்தத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.