Lakshya Sen: கனடா ஓபனில் இந்திய இளம் பாட்மின்டன் வீரர் லக்ஷயா சென் சாம்பியன்!
Lakshya Sen: 2022 ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா ஓபனை வென்ற லக்ஷ்யாவின் இரண்டாவது பி.டபிள்யூ.எஃப் வேர்ல்டு டூர் 500 பட்டம் இதுவாகும்.
காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் லக்ஷயா சென், கனடா ஓபன் பாட்மின்டன் ஃபைனலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லி ஷி ஃபெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
21 வயது வீரரான லக்ஷயா சென், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு ஆல் இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் லி ஷி ஃபெங்கை (உலக தரவரிசையில் 10-வது இடம்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
"மறக்க முடியாத சிறப்பான ஆட்டத்தால் கனடா ஓபன் பட்டத்தை வென்ற லக்ஷயா சென்னுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்திய விளையாட்டு வீரர்களின் உண்மையான திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் எப்போதும் புதிய உயரங்களை அடைய வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022 ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா ஓபனை வென்ற லக்ஷ்யாவின் இரண்டாவது பி.டபிள்யூ.எஃப் வேர்ல்டு டூர் 500 பட்டம் இதுவாகும்.
உலக தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள லக்ஷ்யா சென், ரவுண்ட் ஆஃப் 32-ல் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் குன்லாவுட் விடிட்சார்னையும், அரையிறுதியில் டபிள்யூஆர்-11 ஜப்பானின் கென்டோ நிஷிமோடோவையும், இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சீனாவின் லி ஷி ஃபெங்கையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடா ஓபனில் ரவுண்ட் ஆஃப் 32-ல், லக்ஷ்யா சென்னின் தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்தின் பேட்மிண்டன் வீரர் குன்லாவுட் விட்டிட்சார்னை எதிர்கொண்டார். சென் 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ரவுண்ட் 16-ல் லக்ஷ்யா சென் பிரேசிலின் யாகோர் கொய்லோ டி ஒலிவேராவை எதிர்கொண்டார். இதில் சென் 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
காலிறுதிப் போட்டியில் ஜெர்மன் பேட்மிண்டன் வீரர் ஜூலியன் கராகியை எதிர்கொண்டார். கனடா ஓபனில் 3-வது செட்டில் நுழைந்த லக்ஷ்யா சென்னின் ஒரே போட்டி இதுவாகும். முதல் செட்டை 21-8 என வென்ற சென், 2-வது செட்டில் கடுமையாக போராடி 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் 3-வது செட்டில் சென் 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை தோற்கடித்தார்.
இறுதிப் போட்டியில் சீனாவின் லி ஷி ஃபெங்கை எதிர்கொண்ட லக்ஷ்யா 21-18, 22-20 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து தனது மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 14-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
டாபிக்ஸ்