Football: ரூ. 2,700 கோடி டீல்! நோ சொன்ன ஸ்டார் கால்பந்து வீரர் - ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Football: ரூ. 2,700 கோடி டீல்! நோ சொன்ன ஸ்டார் கால்பந்து வீரர் - ஏன் தெரியுமா?

Football: ரூ. 2,700 கோடி டீல்! நோ சொன்ன ஸ்டார் கால்பந்து வீரர் - ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 27, 2023 11:49 AM IST

கால்பந்து விளையாட்டில் மிகப் பெரிய டிரான்ஸ்பர் தொகை செலுத்த முன்வந்த அல்-ஹிலால் கிளப் அணிக்கு விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கால்பந்து நட்சத்திர வீரரான எம்பாப்பே. அத்துடன் தான் விளையாட விரும்பும் கிளப் அணி பற்றியும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணி நட்சத்திர கால்பந்து வீரர் எம்பாப்பே
பிரான்ஸ் அணி நட்சத்திர கால்பந்து வீரர் எம்பாப்பே (AP)

இந்த அணி 2017 முதல் விளையாடி வரும் எம்பாப்பே, இதுவரை 176 ஆட்டங்களில் விளையாடி 148 கோல்கள் அடித்துள்ளார். தற்போது அவருக்கு பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

எம்பாப்பே ஒப்பந்தத்தை மேலும் நீடிக்க பிஎஸ்ஜி அணி முயற்சித்தபோதிலும், உலக அளவில் புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டு கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்தார். இதன் காரணமாகவே உலக அளவில் வேறு எந்த வீரருக்கும் கிடைக்காத இந்த சாதனை மிக்க டீல் வேண்டாம் என மறுத்துள்ளார் என அவரது நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு பின்னர் எம்பாப்பே டிரான்ஸ்பர் முறையில் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சவுதியை சேர்ந்த கிளப் அணியான அல்-ஹிலால், பிஎஸ்ஜி அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி 330 மில்லியன் யூரோவுக்கு, இந்திய மதிப்பில் ரூ. 2,700 கோடிக்கு மேல் டிரான்ஸ்பர் தொகையாக செலுத்த முன் வந்துள்ளது. ஆனால் இந்த டீலுக்கு எம்பாப்பே மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அல்-ஹிலால் அணியின் நிர்வாகிகளை சந்திக்க அவர் மறுத்துவிட்டராம்.

ஏற்கனவே, இதே அல்-ஹிலால் அணி மற்றொரு உலகப் புகழ் பெற்ற ஸ்டார் வீரரான லியனல் மெஸ்ஸி தங்களது அணியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் மெஸ்ஸி அமெரிக்கா கால்பந்து கிளப் அணியான இன்டர் மியாமி அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். மெஸ்ஸியும் இரண்டு ஆண்டுகல் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடியுள்ளார்.

முன்னதாக, இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் முடிந்த பின்னர், கூடுதலாக 12 மாதங்கள் நீடிப்பு செய்யுமாறு பிஎஸ்ஜி அணி வைத்த கோரிக்கையை, 24 வயதாகும் இளம் வீரரான எம்பாப்பே ஏற்க மறுத்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.