IND vs WI First Odi: கபில்தேவ் சாதனை தகர்ப்பு! புதிய சாதனை புரிந்த ஜடேஜா - குல்தீப் யாதவ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதில் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் ஜடேஜா. மற்றொரு ஸ்பின்னரான குல்தீப் யாதவும், ஜடேஜாவும் இணைந்து புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பார்போடாஸில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சு அமைந்தது.
இடது கை ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் - ரவீந்திர ஜடேஜா இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆர்டரை காலி செய்த நிலையில், 23 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி கேப்டன் ஹோப் அதிகபட்சமாக 43 ரன்கள். இவருக்கு அடுத்தபடியாக அலிக் அத்தானாஸ் 22 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன் 20 ரன்கள் கூட தாண்டவில்லை.
இந்த போட்டியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் களமிறங்கினார். தனது முதல் போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை எடுத்தார். குல்தீப் யாதவ் துல்லிய பந்து வீச்சில் பேட்ஸ்மேன்களை மிரட்டியதோடு வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா ரன்களை விட்டுக்கொடுத்தபோதிலும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3 என இந்த ஜோடி இணைந்து 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடது கை பந்து வீச்சாளர்கள் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளனர்.
அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மிகவும் குறைவான ஸ்கோரில் அந்த அணியை ஆல்அவுட்டாக்கியுள்ளது இந்திய அணி.
அத்துடன் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவின் சாதனையை முறியடித்தார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 44 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். 43 விக்கெட்டுகள் உடன் கபில்தேவ் இரண்டாவது இடத்திலும், 41 விக்கெட்டுகள் உடன் அனில் கும்ப்ளே மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வால்ஷ் 45 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். தற்போது இந்த ஒரு நாள் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் ஜடேஜா அதையும் முறியடிப்பார் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்