Artic Open 2023: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜ்
ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த நட்சத்திர வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜெர்மனி வீரர் மேக்ஸ் வெய்ஸ்கிர்சென் என்பவரை அவர் வீழ்த்தியுள்ளார்.
இருவருக்கும் இடையிலான போட்டியில் ஸ்கோர் 11-6 என்ற செட் கணக்கில் இருந்தபோது ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் ஜெர்மனி வீரர். இதனால் ஸ்ரீகாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் அடுத்த போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த காந்தா சுனேயாமா அல்லது இந்தோனேசியாவின் ஷேசர் ஹிரன் ருஸ்டாவிடோ ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல், கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரரான கிரண் ஜார்ஜ், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் என்பவருக்கு எதிரான போட்டியில் 24-22, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். பரபரப்பான இந்தப் போட்டி 73 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இன்னொரு இந்திய வீரரான மஞ்சுநாத், சீனா வீரர் வெங் ஹாங் யாங் என்பவருக்கு எதிரான போட்டியில் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.
கலவை இரட்டையர் பிரிவில் சாய் பிரதீக், தனிஷா க்ராஸ்டோ, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ருதுபர்ண பாண்டா மற்றும் ஸ்வேதபர்ண பாண்டா ஆகியோர் தங்களது முதல் சுற்று போட்டியில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
முன்னதாக மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, ஜப்பானிய வீராங்கனைநோசோமி ஒகுஹாராவை என்பவரை 21-13, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான 19வது மோதலான இதில், நோசோமி ஒகுஹாராவை 10வது முறையாக தோற்கடித்தார் பிவி சிந்து.
மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் 18-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் லியான் டானை தோற்கடித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்