Tamil News  /  Sports  /  Kaviya Maran, Will You Marry Me? - Fan Proposal During Sunrisers Eastern Cape Vs Paarl Royals Match In Sa20 League
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது காவ்யா மாறனுக்கு புரொபோஸ் செய்த ரசிகர்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது காவ்யா மாறனுக்கு புரொபோஸ் செய்த ரசிகர்

Kaviya Maran:Will you Marry me? காவ்யா மாறனுக்கு வந்த மேரேஜ் புரொபோசல் - விடியோ

20 January 2023, 14:39 ISTMuthu Vinayagam Kosalairaman
20 January 2023, 14:39 IST

தென்ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் விளையாடிய போட்டியின்போது அந்த அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறனுக்கு மேரேஜ் புரொபோசல் செய்துள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

SA20 லீக் தொடர் தென்ஆப்பரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பிடித்திருக்கும் 6 அணிகளையும், வெவ்வேறு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கியுள்ளனர். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர்கள் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணியை வாங்கியுள்ளனர். அந்த அணியின் இணை உரிமையாளராக சன்நெட்வொர்க் நிறுவன தலைவர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளிலும், அணி தொடர்பான பிற நிகழ்ச்சிகளிலும், ஐபிஎல் ஏலத்திலும் தவறாமல் பங்கேற்று வருவதை தவறாமல் கடைப்பிடிக்கிறார் காவ்யா மாறன். இதையடுத்து தென்ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் முதல் டி20 லீக்கான SA20 லீக்கிலும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் விளையாடும் அனைத்து போட்டிகளை காண செல்லும் காவ்யா மாறன், மைதானத்தில் தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

இதைத்தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பார்ல் நகரிலுள்ள பேலாந்து பார்க்கில் நடைபெற்ற போட்டியை கண்டுகளித்துள்ளார் காவ்யா மாறன். அந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 8வது ஓவரில், போட்டியை காண வந்த ரசிகர் ஒருவரின் பக்கம் கேமரா திருப்பப்பட்டது. அவர் தனது கையில் வைத்திருந்த அட்டையில், "KAVYA MARAN, WILL YOU MARRY ME?" என ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டு காவ்யா மாறனுக்கு மேரேஜ் புரொபோசல் செய்திருந்தார்.

இதுதொடர்பான விடியோவை SA20 லீக்கின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகியுள்ளது. அத்துடன் இந்த விடியோ தொடர்பாக காவ்ய மாறன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

SA20 லீக் தொடரில் இதுவரை 5 போட்டிகள் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டாபிக்ஸ்