July Sports Rewind: செஸ் முதல் கிரிக்கெட் வரை ஜூலை மாத ஸ்போர்ட்ஸ் ரீவைண்ட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  July Sports Rewind: செஸ் முதல் கிரிக்கெட் வரை ஜூலை மாத ஸ்போர்ட்ஸ் ரீவைண்ட்

July Sports Rewind: செஸ் முதல் கிரிக்கெட் வரை ஜூலை மாத ஸ்போர்ட்ஸ் ரீவைண்ட்

Manigandan K T HT Tamil
Jul 31, 2023 06:40 AM IST

ஜூலை மாதத்தில் விளையாட்டில் நடந்த சுவாரசியமான செய்திகளின் தொகுப்பு.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, 83வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆதித்யா சமந்த்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, 83வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆதித்யா சமந்த்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

ஜூலை 2- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 155 ரன் குவித்தும் பலன் இல்லை.   

ஜூலை 3-தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் இந்திய வீராங்கனை மானா படேல் புதிய தேசிய சாதனையை படைத்தார்.

ஜூலை 4- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஜூலை 5- இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக தமிழர் ஆதவ் அர்ஜுனா தேர்வு ஆகினார்.

ஜூலை 7- வங்க தேச பிரதமரின் தலையீட்டால் ஓய்வு முடிவை பின்வாங்கினார் கேப்டன் தமிம் இக்பால்.

ஜூலை 9-கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை குவாலிஃபையர் பைனலில் இலங்கை வெற்றி பெற்றது.

ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

முதல் டி20 ஆட்டம் இன்று டாக்காவில் நடந்தது. அந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஜூலை 10- டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி நெல்லை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கனடா ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் லக்ஷயா சென் ‘சாம்பியன்’ ஆனார்.

ஜூலை 11- டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நெல்லையை வீழ்த்தி கோவை கிங்க்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டதை தட்டிச் சென்றது.

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி ஊக்கத் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி புதிய சாதனை படைத்தது.

ஜூலை 12- ஆசிய தடகள போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கம் கண்டது. புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3-வது இந்தியர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

ஜூலை-13 ஆசிய விளையாட்டுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது  டெஸ்ட்டில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 421 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்தார்.

ஜூலை-14 ஆசிய தடகள போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீ சங்கர் வெளிப்பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை மார்ககெட்டா வோன்ட்ரோ சோவா முதல் முறையாக ‘சாம்பியன்’ பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஜூலை-15 சென்னையின் எப்.சி. பயிற்சியாளராக கோயல் நியமனம்.

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் முதல் முறையாக இந்திய அணியை தோற்கடித்து வரலாறு படைத்தது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 27 பதக்கங்களை குவித்து 3-வது இடத்தை பிடித்தது.

விம்பிள்டன் டென்னிசில் ஸ்பெயின் இளம் புயல் அல்காரஸ் 5 செட்டுகள் வரை போராடி ஜோகோவிச்சை சாய்த்து கோப்பையை வென்றார்.

ஜூலை-16 இன்டர் மியாமி அணியில் இணைந்த மெஸ்சி

ஜூலை-17 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் நேரடி தேர்வு

ஜூலை-18 டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை

வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஜூலை-19 முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஜூலை-20 வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் விராட் கோலி

ஜூலை-21 இந்தியா வங்க தேசம் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது   

ஜூலை-22 கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.  

ஜூலை-23 நடுவரின் முடிவை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுருக்கு 2 போட்டியில் விளையாட தடை

ஜூலை 25: ஐந்தாவது நாள் முழுவதும் மழை காரணமாக போட்டி நடைபெறாத நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது போட்டி டிரா ஆனது. இந்தியா இந்த தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

ஜூலை 27: இந்தியாவின் 83வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் ஆதித்யா சமந்த். இவர் மகாராஷ்டிரத்தை சேர்ந்தவர் ஆவார்.

முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்.

ஜூலை 29: இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது.

ஜூலை 30: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.