Jasprit Bumrah: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'-அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கு இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா!
காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.
அயர்லாந்து சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, காயம் காரணமாக நீண்ட பிரேக் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்துகிறார். இதற்கிடையில், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கு செல்லவுள்ள இந்திய அணி
ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டபிள்யூ சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் விளையாடவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பதிவிட்டிருந்தார் பும்ரா.
காயம் காரணமாக 2022 செப்டம்பரில் இருந்து பும்ரா விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் பும்ராவுக்கு நியூசிலாந்தில் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பும்ரா தனது தனித்துவமான பந்துவீச்சால் மீண்டும் களத்தில் இறங்குவதைக் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தொடர் காயம் காரணமாக அவரால் அணியில் இடம் முடியவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீண்டும் அணிக்கு திரும்ப முயற்சித்தார்.
ஆரம்பத்தில், காயம் தீவிரமாகத் தெரியவில்லை, அதனால் அவர் செப்டம்பரில் இந்தியாவின் டி 20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார், மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 25 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டி 20 போட்டிகளிலும் விளையாடினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை. அவர் ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டார். இது அவரது முதுகில் காயம் இருப்பதைக் காட்டியது. அவர் என்.சி.ஏவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் காயம் தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்தியது. இதனால் அவர் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறினார்.
பும்ரா டிசம்பர் மாதத்தில் பந்துவீசத் தொடங்கினார். ஆனால், அவருக்கு முதுகு வலி தொடர்ந்து நீடித்தது. அதைத்த தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தொடர், பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டி ஆகியவற்றில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
டாபிக்ஸ்