England Playing XI: 4வது டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  England Playing Xi: 4வது டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு

England Playing XI: 4வது டெஸ்டுக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு

Manigandan K T HT Tamil
Jul 17, 2023 05:52 PM IST

மொயீன் அலி 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை இங்கிலாந்து லெவன் அணி உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (Action Images via Reuters)

ஒல்லி ராபின்சன் இடத்திற்கு வருகிறார் ஆண்டர்சன்.

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் புதன்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) சேர்த்துள்ளது

இதுதொடர்பான அறிக்கையில், கடந்த வாரம் ஹெட்டிங்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த அணியில் இடம்பெற்றிருந்த சசெக்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சனுக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதைத் தொடர்ந்து, பிளேயிங் லெவனில் ஜேம்ஸ் ஆண்டர்சன்னின் இடம் கேள்விக்குறியானது. இதன் விளைவாக லீட்ஸில் நடந்த முக்கியமான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இருப்பினும், ஓல்ட் டிராபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு வலுவான சாதனையைக் கொண்டுள்ளார் - அவர் 2004 முதல் அங்கு 10 டெஸ்ட் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மொயீன் அலி 3-வது வரிசையில் பேட்டிங் செய்வதை இங்கிலாந்து லெவன் அணி உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜொனாதன் பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.