Yashasvi Jaiswal: ‘சதம் விளாச யஷஸ்விக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு’-முன்னாள் இந்திய வீரர் கணிப்பு
Ind vs WI: ‘இந்த ஆட்டத்தில் இன்னும் நிறைய நேரம் இருப்பதால் அவர்கள் தங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 70 ரன்களை எடுக்க முயற்சிப்பார்கள்.’
முதல் டெஸ்டில் சதம் அடிக்க யஷஸ்விக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பவுலர் இஷாந்த் சர்மா தெரிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி தனது சிறந்த பவுலிங்கால் எதிரணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தியது.
ஆஃப் ஸ்பின்னர் ஆர்.அஸ்வின் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வர்ணனை செய்து வரும் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, சதம் பதிவு செய்ய யஷஸ்விக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரோஹித் சர்மா (30 பேட்டிங்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (40 பேட்டிங்) ஆகியோர் முதல் ஒரு மணி நேரத்தில் தங்கள் அணுகுமுறையில் கவனமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்மிடம் ஏற்கனவே வலுவான அடித்தளம் இருப்பதால் ரன்கள் மெதுவாக எடுத்தாலும் பரவாயில்லை என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள். இந்த ஆட்டத்தில் இன்னும் நிறைய நேரம் இருப்பதால் அவர்கள் தங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 70 ரன்களை எடுக்க முயற்சிப்பார்கள்.
யஷஸ்விக்கு இப்போது ஒரு பிளாட்ஃபார்ம் கிடைத்துள்ளது. அவர் முதலில் தனது அரைசதத்தை எட்ட முயற்சிக்க வேண்டும். பின்னர் படிப்படியாக தனது இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும். சதம் அடிக்க அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து, இந்தியா 300 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டால், அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய தேவையிருக்காது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் செஷன் மிக முக்கியமானது. முதல் ஒரு மணி நேரத்தில் விக்கெட் எடுக்க முடியாவிட்டாலும், ரன் ரேட்டைக் குறைத்து ஆட்டத்தில் நீடிக்க முயற்சிக்க வேண்டும் என்றார் இஷாந்த் சர்மா.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்