தமிழ் செய்திகள்  /  Sports  /  Isl 2024: Bipin Singh Thounaojam Twin Goal Helps Mumbai City To Win Against Chennaiyin Fc

ISL 2024: எதுவுமே சரியாக அமையல! மும்பை சிட்டிக்கு எதிராக சென்னையின் எஃப்சி தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 24, 2024 02:55 PM IST

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மோசமான தோல்வியை மும்பை சிட்டி அணிக்கு எதிராக சென்னையின் எஃப்சி பெற்றுள்ளது.

மும்பை சிட்டிக்கு எதிரான போட்டியி்ல பந்தை பாஸ் செய்ய முயற்சிக்கும் சென்னையின் எஃப்சி வீரர்
மும்பை சிட்டிக்கு எதிரான போட்டியி்ல பந்தை பாஸ் செய்ய முயற்சிக்கும் சென்னையின் எஃப்சி வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாதியில் கோல் அடிக்கும் முயற்சியில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பிபின் சிங் முதல் கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும் இவரே அணிக்கான இரண்டாவது கோல் அடிக்கவும் செய்தார்.

பந்தை பாஸ் செய்வது, தங்களது கட்டுப்பாட்டில் பந்தை வைத்துக்கொள்வது, அதிக ஷாட்களை டார்கெட் செய்தது என ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிலேயே மும்பை அணி வைத்துக்கொண்டது. மொத்தம் 8 ஷாட்களை டார்கெட் செய்த மும்பை 2ஐ கோல்களாக மாற்றியது.

உள்ளுர் ரசிகர்களின் முன்னிலையில் முழு ஆதரவுடன் விளையாடியபோதிலும் சென்னையின் எஃப்சி எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தவில்லை. 3 ஷாட்களை மட்டும் சென்னையின் எஃப்சி சரியாக டார்கெட் செய்தது.

இந்த சீசனில் டாப் அணியாக இருந்து வரும் மும்பை சிட்டி தனது பார்மை தொடர்ந்து வருகிறது. மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்திய சென்னையின் எஃப்சி தற்போது மீண்டும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்