தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 04, 2024 05:50 PM IST

கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கி மும்பை சிட்டி அணி உள்ளது.

மோகன் பகான் - மும்பை சிட்டி இன்று மோதல்
மோகன் பகான் - மும்பை சிட்டி இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

2023-24 தொடர் ஐஎஸ்எல் 10வது சீசனாக அமைந்திருக்கும் நிலையில், இந்த சீசன் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. சுமார் ஆறு மாத காலம் வரை நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பை சிட்டி - மோகன் பகான் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று மாலை 7.30 நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனாக இருந்து வரும் மும்பை சிட்டி, மீண்டும் கோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் முன்னாள் சாம்பியனாக இருந்து வரும் மோகன் பகான் அணியின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2020-21 சீசனுக்கு பிறகு மீண்டும் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. அப்போது மும்பை சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. எனவே இந்த முறை மோகன் பாகன் பதிலடி கொடுக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

மோகன் பகான் கடந்து வந்த பாதை

இந்த சீசனில் மோகன் பகான் 22 போட்டிகளில் விளையாடி 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா செய்துள்ளது. 48 புள்ளிகளை பெற்றிருக்கும் மோகன் பகான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அரையிறுதி போட்டியில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

மோகன் பகான் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை வென்றால் ஐந்தாவது முறை கோப்பையை வெல்லும் அணி என்ற பெருமையை பெறும்.

மும்பை சிட்டி கடந்து வந்த பாதை

இந்த சீசனில் மும்பை சிட்டி அணி 22 போட்டிகளில் 14 வெற்றியை பெற்று, 3 தோல்வி, 5 போட்டிகளை டிரா செய்துள்ளது. 48 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அரையிறுதி போட்டியில் கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பை சிட்டி தற்போது மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

லீக் சுற்றில் மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள்

இந்த சீசனில் மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் லீக் சுற்றில் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளும் உச்சகட்ட பார்மில் இருப்பதால் இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த முறை மோகன் பகான் கோப்பையை வென்றால் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும். முதல் இடத்தை பிடிக்கும் அணி கோப்பையுடன் ரூ. 6 கோடி பணம் வழங்கப்படும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி ரூ. 2.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்