Ishan Kishan: 'மூழ்காத ஷிப்பே Friendship தான்'-ரிஷப் பண்டின் பேட்டில் விளையாடிய இஷான் கிஷன்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ishan Kishan: 'மூழ்காத ஷிப்பே Friendship தான்'-ரிஷப் பண்டின் பேட்டில் விளையாடிய இஷான் கிஷன்!

Ishan Kishan: 'மூழ்காத ஷிப்பே Friendship தான்'-ரிஷப் பண்டின் பேட்டில் விளையாடிய இஷான் கிஷன்!

Manigandan K T HT Tamil
Jul 24, 2023 01:55 PM IST

Rishab Pant: அவரது பேட்டில் RP-17 என குறிப்பிடப்பட்டிருந்தது. RP என்பது ரிஷப் பண்ட் என்பதை குறிக்கும்

இஷான் கிஷன், ரிஷப் பண்ட்
இஷான் கிஷன், ரிஷப் பண்ட்

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களில் ஆல்-அவுட்டானது.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களம் புகுந்த இந்தியா 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அவர் ரிஷப் பண்ட் பேட்டை பயன்படுத்தி இந்த ஸ்கோரை பதிவு செய்தார்.

அவரது பேட்டில் RP-17 என குறிப்பிடப்பட்டிருந்தது. RP என்பது ரிஷப் பண்ட் என்பதை குறிக்கும்.

கார் விபத்தை தொடர்ந்து ரிஷப் பண்ட் இந்திய அணியில் விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளார். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவரை விளையாட வைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்புகிறது. ஆனால், அதற்குள் அவர் தேறிவிடுவாரா என்பது தெரியவில்லை. அதேநேரம், அவர் தற்போது வேகமாகவே உடல்நலம் தேறி வருகிறார்.

இஷானும், ரிஷப் பண்டும், யு-19 2016 உலகக் கோப்பையில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர்கள் ஆவர். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக பேட் பொசிஷன்ஸ் குறித்து கூறியதற்காக ரிஷப் பண்டுக்கு அவர் நன்றியும் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 365 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கியது. அப்போது களமிறங்கிய பிரீத் வெயிட் மற்றும் சந்தர்பால் ஆகியோர் விளையாடினர். இதில் பிரீத் வோயிட் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் நான்காவது நாள் ஆட்ட முடிவில், சந்தர்பால் 24 ரன்களும், பிளாக் அவுட் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பாக அஸ்வின் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.