Tamim Iqbal: பிரதமர் தலையீடு! ஓய்வு முடிவிலிருந்து யூ டர்ன் - குறும்பு Meme பதிவிட்டு அங்கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் சந்திப்புக்கு பிறகு ஓய்வு அறிவிப்பு திருப்ப பெற்றார் வங்கதேச கிரிக்கெட் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன், ஸ்டார் வீரர் தமீம் இக்பால். அவரது இந்த முடிவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறும்பத்தனமான மீம் பதிவிட்டு அங்கலாயத்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச கிரிக்கெட் அணி ஒரு நாள் கேப்டனும், ஸ்டார் வீரருமான தமீம் இக்பால் சர்வதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். மிகவும் உணர்ச்சிகரமான பேசிய அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியே தனது கடைசி போட்டி என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமீம் இக்பாலின் இந்த முடிவை திரும்ப பெறுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார் தமீம் இக்பால். இந்த சந்திப்புக்கு பின்னர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறும் முடிவை எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமீம் இக்பால் ஓய்வு முடிவை திரும்ப பெற்றிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜலால் யூனுஸ் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை அறிவத்த மறுநாளே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
இதுகுறித்து ஜலால் யூனுஸ் கூறியதாவது: "தமீம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்பபெற்றுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பின்னர் மனநிலையை மாற்றிக்கொண்டுள்ளார்.
அவர தனது பழைய பிட்னஸை திரும்ப பெற ஆறு வார காலம் வரை ஓய்வில் இருப்பார். கடந்த ஆறு மாதங்களாக உடல் மற்றும் மனரீதியாக அவருக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்" என்றார்.
ஒரே நாளில் தமீம் இக்பால் ஓய்வு முடிவை திரும்ப பெற்றிருப்பது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இந்த முடிவை இந்திய ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் குறும்புத்தான மீம் பகிர்ந்து அங்கலாய்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்த மீம் புகைப்படத்தில், தோனி ஸ்டம்பிங் செய்வது, யஷஸ்வி ஜெய்ஸ்வால், மார்க் வுட் ஆகிய புகைப்படங்களும் தமீம் இக்பால் படத்தையும் சேர்த்து, 2023ஆம் ஆண்டின் வேகமான விஷயங்கள் என குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் இந்திய ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினும், இந்த ஒட்டு மொத்த சம்பவத்தை ஆச்சரியம், ஆர்வம், கவனத்தை ஈர்க்க வெளிப்படுத்தும் விதமாக "whoa" என்ற எமோஜியை பதிவிட்டுள்ளார்.
வங்கதேச அணிக்காக 2007 முதல் விளையாடி வரும் தமீம் இக்பால், அணிக்காக பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்வது பற்றி பிரதமர் கூறியிருக்கலாம் எனவும், அதை கருத்தில் கொண்ட அவர் ஓய்வு முடிவை திரும்ப பெற்றிருக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்