SA20: தென்ஆப்பரிக்கா டி20 தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே ஸ்டார் பேட்டிங் ஆல்ரவுண்டர்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sa20: தென்ஆப்பரிக்கா டி20 தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே ஸ்டார் பேட்டிங் ஆல்ரவுண்டர்

SA20: தென்ஆப்பரிக்கா டி20 தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே ஸ்டார் பேட்டிங் ஆல்ரவுண்டர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 07, 2023 04:16 PM IST

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து அணியின் ஆஃப் ஸ்பின்னருமான மொயின் அலி தென்ஆப்பரிக்காவில் நடைபெறும் SA20 லீக் தொடரில் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

2023 ஐபிஎல் கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள்
2023 ஐபிஎல் கோப்பையுடன் சிஎஸ்கே வீரர்கள் (AFP)

இதையடுத்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடரின் இரண்டாவது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் மொயின் அலி விளையாடவுள்ளார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டராக இருந்து வரும் மொயின் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ILT20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக பங்கேற்றார். இந்த தொடரும், SA20 தொடரும் ஒரே சமயத்தில் நடைபெற்றதால் இந்த ஆண்டில் மொயின் அலி தென் ஆப்பரிக்கா டி20 தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

இதையடுத்து தற்போது SA20 தொடரின் இரண்டாவது சீசனில் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார்.

ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டூ பிளெசிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட், நமிபியா ஆல்ரவுண்டர் டேவிட் வைஸ், ஆப்கானிஸ்தான் இடது கை ஸ்பின்னர் ஜாகிர் கான், அன்கேப்ட் வீரரான சாம் குக் ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதே போல் இந்த தொடரில் விளையாடும் மற்ற 5 அணிகளும் தங்களது அணியில் விளையாடும் முக்கிய வீரர்கள் தக்க வைத்துள்ளனர். புதிதான வீரர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

SA20 தொடர் இரண்டாவது சீசனில் அணிகளுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் ஒப்பந்தம் ஜூலை 31 வரை செய்து கொள்ளலாம் எனவும், தென்ஆப்பரிக்கா வீரர்கள் ட்ரேட் செய்யவும், வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் மீதம் இருக்கும் தொகையை வைத்து செப்டம்பர் மாதம் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் SA20 தொடர், 2024 ஜனவரியில் தொடங்கி  நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.