Varun Chakaravarthy: ஈடன் கார்டனில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி-ஷிகர் அரை சதம், KKR-க்கு 180 இலக்கு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Varun Chakaravarthy: ஈடன் கார்டனில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி-ஷிகர் அரை சதம், Kkr-க்கு 180 இலக்கு

Varun Chakaravarthy: ஈடன் கார்டனில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி-ஷிகர் அரை சதம், KKR-க்கு 180 இலக்கு

Manigandan K T HT Tamil
May 08, 2023 09:25 PM IST

KKR vs PBKS: முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தி (AFP)

கொல்கத்தாவில் இந்தப் போட்டி நடைபெறுவதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கொல்கத்தா அணிக்கு அதிகம் இருக்கிறது.

இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது.

டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.

தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களிலும், பனுகா ராஜபக்ஷா ரன்களின்றியும் ஆட்டமிழந்தனர்.

லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் கர்ரன் உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்த சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஷிகர் தவன் நின்று விளையாடி அரை சதம் விளாசினார். 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தபோது நிதிஷ் ராணா பந்துவீச்சில் அவர் வைபவிடம் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

அவர் மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக நின்று அணி கவுரவமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்.

இன்றைய ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார். ஒரே ஒரு எக்ஸ்ட்ரா பந்தை மட்டுமே வீசினார். ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது பஞ்சாப். 120 பந்துகளில் 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடுகிறது.

கேப்டன் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.