CSK Fans: Attention Superfans!சிஎஸ்கே ரசிகரா நீங்க.. அப்போ இதை முதல்ல படிங்க..!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Csk Fans: Attention Superfans!சிஎஸ்கே ரசிகரா நீங்க.. அப்போ இதை முதல்ல படிங்க..!

CSK Fans: Attention Superfans!சிஎஸ்கே ரசிகரா நீங்க.. அப்போ இதை முதல்ல படிங்க..!

Manigandan K T HT Tamil
Apr 03, 2023 04:45 PM IST

Chennai Super Kings: நீங்கள் சேப்பாக்கம் கிளம்பிட்டு இருக்கீங்களா? அப்போது நீங்க இந்த விவரத்தை முதல்ல தெரிந்து கொள்ள வேண்டும்.

சிஎஸ்கே ரசிகர்கள், சேப்பாகம் மைதானம்
சிஎஸ்கே ரசிகர்கள், சேப்பாகம் மைதானம் (@ChennaiIPL)

இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியதெல்லாம் நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அன்றைய தினம் இதோ வந்துவிட்டது.

நீங்கள் சேப்பாக்கம் கிளம்பிட்டு இருக்கீங்களா? அப்போது நீங்க இந்த விவரத்தை முதல்ல தெரிந்து கொள்ள வேண்டும்.

சேப்பாக்கம் மைதானத்தின் கேட்கள் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். சில காரணங்களுக்கு நேரம் முன்பின்னே இருக்கலாம்.

சரியாக 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். 7 மணிக்கு டாஸ் போடப்படும். இ-டிக்கெட்டை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன், அரசு அடையாள அட்டை ஒன்றையும் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு எந்த கேட் நுழைவு வாயிலாக கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த கேட் வழியாகவே செல்லுங்கள்.

வேறு கேட் சென்றுவிட்டால் திருப்பி அனுப்பப்படுவீர்கள். இதனால், வரிசையில் நின்று நேரம்தான் வீணாகும்.

உங்கள் மின்னணு டிக்கெட்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம். அவர்கள் தவறுதலாக பயன்படுத்திவிட வாய்ப்புண்டு.

சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்கிங் வசதி கிடையாது. இந்த மைதானத்தை சுற்றிலும் கூட பார்க்கிங் வசதி இல்லை.

எனவே, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்கள் வர வேண்டும். அதுவே உங்களுக்கு சிரமம் இல்லாமல் போட்டியை ரசிக்கக் கூடிய வழியாகவும் இருக்கும்.

மெட்ரோ ரயிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இலவசமாக இன்று பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு நீங்கள் போட்டியைப் பார்ப்பதற்கு எடுத்த இ-டிக்கெட்டை மட்டும் காண்பிக்க வேண்டும்.

கவர்ன்மென்ட் எஸ்டேட் மெட்ரோ ஸ்டேஷன், மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள மெட்ரோ ஸ்டேஷன் ஆகும்.

பேருந்தை பயன்படுத்தி நீங்கள் வந்தால் அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இந்தப் பொருட்களெல்லாம் எடுத்துட்டு போகாதீங்க..

பவர்பேங்ஸ், மதுபானங்கள், நாணயங்கள், உணவுப் பண்டங்கள், ஹெல்மட், செல்ஃபி ஸ்டிக், தீப்பெட்டி, லைட்டர், எரியக்கூடிய எந்தப் பொருளுக்கும் அனுமதி இல்லை.

சிரஞ்சி, கத்தி, கத்திரிக்கோல், கூர்மையான பொருட்கள், குடை, பேக்குகள், காலேஜ் பேக், பிரீஃப் கேஸ், சூட்கேஸ், லேடீஸ் ஹேண்ட் பேக் ஆகியவற்றை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை.

ஹேண்டிகேம், கேமிராவும் கொண்டு வர அனுமதி கிடையாது.

இந்தத் தகவலை சிஎஸ்கே நிர்வாகம் ட்விட்டரில் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.