CSK: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50வது ஆட்டத்தில் விளையாடும் சிஎஸ்கே வீரர்!
Shivam Dube: இந்த ஆட்டம் சிஎஸ்கே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிவம் துபேவுக்கு 50வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாகும். இதுவரை ஷிவம் துபே 1073 ரன்களை ஐபிஎல் போட்டியில் எடுத்துள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்தன. லீக் முடிவில் சிஎஸ்கே, குஜராத், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் சிஎஸ்கே விளையாடி வருகிறது.
இந்த ஆட்டம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிவம் துபேவுக்கு 50வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாகும். இதுவரை ஷிவம் துபே 1073 ரன்களை ஐபிஎல் போட்டியில் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணி இவரை வாங்கியது. ஷிவம் துபே மும்பையில் பிறந்தவர் ஆவார். தற்போது 29 வயது ஆகிறது.
இந்திய டி20 கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் 2019 இல் அறிமுகமானார் ஷிவம் துபே.
ஆல்-ரவுண்டரான இவர், சிஎஸ்கேவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆர்சிபி, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காகவும் இதற்கு முன்பு அவர் விளையாடியுள்ளார்.
அவர் இன்றைய தினம் 50வது ஆட்டத்தில் விளையாடிவரும் நிலையில், அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஷிவம் துபே நடிகை அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். 14 வயதில் கிரிக்கெட் விளையாடியதை நிறுத்திய அவர், பின்னர் 19 வயதில் மீண்டும் விளையாடத் தொடங்கினார். மும்பை அணியிலும் இடம்பிடித்தார்.
ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, ஆகிய போட்டிகளில் விளையாடியிருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் சதமும் பதிவு செய்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்