Canada Open: அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிவி சிந்து, லக்ஷயா சென் தகுதி
கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரவில் லக்ஷயா சென்னும் அ்ரையிறுத்திக்கு முன்னேறியுள்ளார்.
கனடாவிலுள்ள கல்காரி நகரில் கனடா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றார்.
காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை பாங் ஜீ என்பவரை எதிர்கொண்ட சிந்து 21-13, 21-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த சீசனில் பெரிதாக வெற்றியை குவிக்காத பிவி சிந்து இந்த முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் எலும்பு முறிவு காயத்திலிருந்து மீண்டு வந்த பிவி சிந்து பெரிய வெற்றியை பெறாமல் இருந்து வருகிறார். இதையடுத்து கனடா ஓபன் அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையைான ஜப்பானை சேர்ந்த யமகுச்சி என்பவரை எதிர்கொள்கிறார்.
அரையிறுதியில் மோத இருக்கும் யமகுச்சிக்கு எதிராக 14-10 என்ற கணக்கில் வெற்றிகளை பெற்று பிவி சிந்து முன்னிலை வகிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சிக்கு எதிராக தோல்வியை தழுவினார் பிவி சிந்து. அந்த தோல்விக்கு தற்போது பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரரான லக்ஷயா சென் தனது அரையிறுதி போட்டியில், ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் கர்ராகி என்பவரை 21-8, 17-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோ என்பவரை சந்திக்கிறார்.
இதற்கு முன்னர் மோதி கொண்ட போட்டிகளில் லக்ஷயா சென் - நிஷிமோடோ ஆகியோர் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் உள்ளனர்.
ஜூலை 9ஆம் தேதி கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்