தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Next Up: Whistles Paraak! தோனியிடம் விசில் அடிக்க கற்றுக் கொண்ட பிராவோ!

Next up: Whistles Paraak! தோனியிடம் விசில் அடிக்க கற்றுக் கொண்ட பிராவோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2023 09:31 AM IST

டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுத்துள்ளார்.

தோனியுடன் பிராவோ
தோனியுடன் பிராவோ

ட்ரெண்டிங் செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ள ஐபிஎல் தொடர் வரும் 31-ந் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடருக்காக ஐபிஎல் அணிகளை சேர்ந்த வீரர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இரு அணி வீரர்களும் தொடர் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் பயிற்சி செய்யும் போது நடக்கும் சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது அணியின் சமூக வலைதளங்களில் வெளியீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டோனி பந்து வீச்சு பயிற்சியாளரான பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுத்துள்ளார். உற்சாகமாக நம்ம ஊரு சென்னைக்கு விசில் போடுங்க பாடலுக்கு அணியின் கேப்டனான எம்.எஸ்தோனி விசில் அடிக்கிறார். இதைப்பார்த்து பிரவோ விசில் அடிக்க முயற்சிக்கிறார். இந்த கியூட்டான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தோனியிடம் விசில் அடிக்க கற்று கொண்ட பிராவோ யார் தெரியுமா

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்தவர் தான் டுவைன் பிராவே. ஆனால், சிஎஸ்கேவுக்கும், தமிழக ரசிகர்களுக்கும் செல்லப் பிள்ளை. ஆல்-ரவுண்டரான பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியவர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சிஎஸ்கே அணியுடனான அவரது பயணம் பவுலிங் கோச்சாக தொடர்கிறது. சிஎஸ்கேவில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவர் பிராவோ.

2008ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கிய முதல் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் இவரை முதல் முதலில் வாங்கியது. இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா காயம் அடைந்ததன் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்பட்டார். 2011ம் ஆண்டில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார் பிராவோ. இவர் அணிக்கு வந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது சிஎஸ்கே. முதலில் பேட்டிங்கில் கவனம் செலுத்தினாலும், பின்னர் பவுலிங்கில் அமர்க்கப்படுத்தினார் பிராவோ.

இவர் கடந்த 2013-இல் 32 விக்கெட்டுகளை பிராவோ கைப்பற்றினார். அதற்கு அடுத்தபடியாக 2015-இல் 26 விக்கெட்டுகளையும் 2022-இல் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

குஜராத் லயன்ஸ், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக மொத்தம் அவர் 161 ஆட்டங்களில் விளையாடி 183 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்