Ashes 2023: டாப் ஆர்டர் காலி! இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா நிதானம் - பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashes 2023: டாப் ஆர்டர் காலி! இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா நிதானம் - பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

Ashes 2023: டாப் ஆர்டர் காலி! இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா நிதானம் - பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 07, 2023 11:57 PM IST

இங்கிலாந்து அணி சேஸிங் செய்வதில் கில்லியாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்த ஆஸ்திரேலியா அணி குறைவான முன்னிலை மட்டும் பெற்றிருப்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஆஷஸ் தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் முடிவுக்கு பின்னர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் டிரேவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ்
ஆஷஸ் தொடர் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாள் முடிவுக்கு பின்னர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் டிரேவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் (AP)

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் தாக்குபிடித்து 80 ரன்கள் அடித்தார்.

இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் இரண்டாவது நாளிலேயே 26 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

குறைவான முன்னிலை, இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டான நிலையில், தற்போது முன்னிலையுடன் 142 ரன்கள் எடுத்துள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாந டிராவிஸ் ஹெட் 18, மிட்செல் மார்ஷ் 17 ரன்களுன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து பவுலர்களில் ஸ்பின்னரான மொயின் அலி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்னும் மூன்று நாள்கள் போட்டி எஞ்சியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு மிக பெரிய இலக்கை நிர்ணயிக்கும் ,முனைப்பில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியாவை ரன்குவிக்க விடாமல் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இங்கிலாந்து வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.