தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Indonesia Open 2024: அடுத்த சுற்றில் லக்‌ஷயா சென், சுமித் ரெட்டி - சிக்கி ரெட்டி ஜோடி! இளம் வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

Indonesia Open 2024: அடுத்த சுற்றில் லக்‌ஷயா சென், சுமித் ரெட்டி - சிக்கி ரெட்டி ஜோடி! இளம் வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 04, 2024 05:56 PM IST

இந்தோனேஷியா ஓபன் 2024 தொடர் அடுத்த சுற்று போட்டிக்கு காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்ற இளம் நட்சத்திர வீரர் லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிரண் ஜார்ஜ் தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

இந்தோனேஷியா ஓபன் அடுத்த சுற்றில் லக்‌ஷயா சென் மற்றும் இரட்டையர் பிரிவில் சுமித் ரெட்டி - சிக்கி ரெட்டி ஜோடி
இந்தோனேஷியா ஓபன் அடுத்த சுற்றில் லக்‌ஷயா சென் மற்றும் இரட்டையர் பிரிவில் சுமித் ரெட்டி - சிக்கி ரெட்டி ஜோடி

ட்ரெண்டிங் செய்திகள்

லக்‌ஷயா சென் முன்னிலை

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்திய இளம் நட்சத்திர வீரர் லக்‌ஷயா சென் முதல் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் வீரர் கன்டா சுனேயாமா என்பவரை எதிர்கொண்ட சுனேயாமா 21-12, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றியை பெற்றார். 40 நிமிடம் வரை இந்த போட்டி நீடித்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறினார் லக்‌ஷயா சென்.

இதையடுத்து இந்தோனேஷியா தொடர் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் லக்‌ஷயா சென், ஏழாவது சீட் வீரர்களான இந்தோனேசியாவின் ஆண்டனி சினிசுகா ஜின்டிங் மற்றும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோ ஆகியோர் மோதும் போட்டியில் வெற்றி பெறுபவரை எதிர்கொள்ள இருக்கிறார்.

கிரண் ஜார்ஜ் தோல்வி

இந்தியாவை சேர்ந்த மற்றொரு இளம் வீரரான கிரண் ஜார்ஜ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சீனாவின் ஹாங் யாங் வெங் என்பவருக்கு எதிராக தோல்வியை தழுவினார்.

மூன்று செட்கள் வரை சென்ற இந்த போட்டியில் முதல் செட்டில் வெற்றி பெற்ற ஜார்ஜ், அடுத்த இரண்டு செட்களை பறிகொடுத்தார். இந்த போட்டியில் 21-11, 10-21, 20-22 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.

கலவை இரட்டையர் பிரிவில் வெற்றி

கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய கலவை இரட்டையர்களான சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி, அமெரிக்க இணையான வின்சன் சியு மற்றும் ஜென்னி கை ஆகியோருக்கு எதிராக வெற்றியை பெற்றனர். முதல் சுற்றை பறிகொடுத்த போதிலும் அடுத்து கம்பேக் கொடுத்து வெற்றியை தன் வசம் ஆக்கினார்கள். இந்த போட்டியில் 18-21, 21-16, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை பெற்றார்கள்.

இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்த சுற்றில் டாப் சீட் வீராங்கனைகளான அடுத்த சீனாவின் சி வெய் ஜெங் மற்றும் யா கியோங் ஹுவாங் மற்றும் இந்தோனேஷியா ஜோடியான ரெஹான் நௌஃபல் குஷார்ஜந்தோ மற்றும் லிசா அயு குசுமாவதி ஆகியோர் மோதும் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்ள உள்ளார்கள். 

மற்ற போட்டிகள்

மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த், சீன தைபேயின் யு-பெய் செங் மற்றும் யு சிங் சன் ஜோடியுடன் மோதுகிறார்கள்.

முன்னாள் உலக நம்பர் 1 வீரரான எச்.எஸ். பிரணாய், ஒற்றையர் தொடக்கச் சுற்றுப் போட்டியில் பிரியான்ஷு ரஜாவத்தையும் எதிர்கொள்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்