BCCI: பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்.. இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் அவுட்.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?-indias ishan kishan and shreyas iyer are not part of the bcci annual retainership list for 202324 - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bcci: பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்.. இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் அவுட்.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?

BCCI: பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்.. இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் அவுட்.. யாருக்கு எவ்வளவு சம்பளம்?

Karthikeyan S HT Tamil
Feb 28, 2024 09:33 PM IST

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது.

Ishan Kishan and Shreyas Iyer
Ishan Kishan and Shreyas Iyer

அதன்படி, கிரேட் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியமும், ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமும், பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரேட் ஏ ப்ளஸ்

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.

கிரேட் ஏ பிரிவு

ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, சிராஜ், சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல்.

கிரேட் பி

சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால்.

கிரேட் சி

ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்துராஜ் கெய்வாட், ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், ப்ரசித் கிருஷ்ணா, ஆவேஸ் கான், ரஸத் படிதார்.

இந்தப் பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் ஆகியோர் இடம்பெறவில்லை என்பதை பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து இந்திய அணியில் இடம்பெறாதபோது இந்திய அளவிலான உள்ளூர் போட்டிகளில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.