FIH Junior World Cup 2023: இன்னும் 30 நாட்கள்.. ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்கு எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fih Junior World Cup 2023: இன்னும் 30 நாட்கள்.. ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்கு எகிறும் எதிர்பார்ப்பு

FIH Junior World Cup 2023: இன்னும் 30 நாட்கள்.. ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைக்கு எகிறும் எதிர்பார்ப்பு

Manigandan K T HT Tamil
Oct 30, 2023 03:00 PM IST

FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 இல் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்.

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி
இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி (@TheHockeyIndia)

FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 சிலியின் சாண்டியாகோவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 10, 2023 வரை நடைபெறவுள்ளது. FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 இல் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும்.

இந்தியா ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் கனடாவுடன் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் புரவலன் சிலி ஆகியவை ஏ- பிரிவிலும், அர்ஜென்டினா, கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை பி பிரிவிலும், பிரிவு டி-யில் இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகியவையும் உள்ளன. இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி நவம்பர் 29-ம் தேதி கனடாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அவர்கள் நவம்பர் 30-ம் தேதி ஜெர்மனியை எதிர்கொள்கிறார்கள் மற்றும் டிசம்பர் 2-ம் தேதி பெல்ஜியத்துக்கு எதிராக களமிறங்குவார்கள்.

ஜூன் 2023 இல் ஜப்பானின் ககாமிகஹாராவில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை 2023 இல், இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி, 2023 ஆம் ஆண்டு எஃப்ஐஎச் ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தியா சார்பில் அன்னு மற்றும் நீலம் ஆகியோர் கோல் அடிக்க, தென் கொரியா சார்பில் பார்க் சியோன் கோல் அடித்தனர். பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பையை இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி வென்றது இதுவே முதல் முறை.

எஃப்ஐஎச் மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 2023க்கு முன்னதாக அணியில் உள்ள சூழல், வீரர்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு தயாராகி வருகின்றனர் என்பது குறித்து பேசிய இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் துஷார் காண்ட்கர், "அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். FIH பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை 2023 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், அதற்கு முன் முன்னேற்றம் அடையும் பகுதிகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

தவறுகளுக்கு இடமளிக்க நாங்கள் விரும்பவில்லை. 2023 மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பையை வெல்வது நிச்சயமாக வீரர்களின் மன உறுதியை உயர்த்தியுள்ளது மற்றும் வீரர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாக உள்ளது. அணியில் உள்ள அனைவரும் இந்த நிலைக்கு வர கடுமையாக உழைத்துள்ளோம், மேலும் எங்கள் உத்திகளை வெற்றிகரமாக செயல்படுத்த முயற்சிப்போம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் இதை செய்வோம்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.