IND vs WI 2nd Test: 500-வது போட்டியில் வரலாறு படைத்த கோலி - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை தொடங்கியது!
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று இந்திய அணி விளையாடுவது.
டொமினிக்காவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கியது. முதலில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கி அரை சதம் அடித்தனர். ரோகித் சர்மா 80 ரன்களும், ஜேசுவால் 57 ரன்களும் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர்.
முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆட்டமிழக்காமல் விளையாடினர். விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்கள் எடுத்து முதலாவது நாள் ஆட்டம் முடிவடைந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்து சதம் அடித்து அசத்தினார். ஜடேஜா அரை சதம் அடித்தார்.
குறிப்பாக 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் வீராட் கோலி சதம் அடித்து வரலாறு படைத்தார். அதன் பின்னர் ஜடஜா மற்றும் விராட் கோலி தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களம் இறங்கிய அஜிங்கியா ரஹானே 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இஷான் கிஷன் களமிறங்கினார். ஜடேஜா விக்கெட் இழந்த பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் களம் இறங்கினார். 25 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜெயதேவ் உனத்கட் களமிறங்கி 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த முகமது சிராஜ் 11 பந்துகளில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட் இழந்து வரும் சூழ்நிலையில் மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு நாள் போட்டி போல அசுரத்தனமாக விளையாடி அரை சதம் அடித்தார்.
அஸ்வின் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் இந்திய அணி மொத்த விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்தது. குறிப்பாக முகேஷ் குமார் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஒரு பந்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கிரேட் பிராத்வைட் - டேஜெனரைன் சந்தர்பால் இருவரும் முதலில் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 50 ரன்கள் கடந்தது.
அப்போது 33 ரன்கள் எடுத்திருந்த சந்திர பால் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்நிலையில் தற்போது கிர்க் மெக்கென்சி 14 ரன்களுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
டாபிக்ஸ்