Satwiksairaj World Record: பத்து ஆண்டு கால சாதனை முறியடிப்பு - அதிக வேக ஸ்மாஷ் அடித்து உலக சாதனை புரிந்த சாத்விக்
கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள சாத்விக்சாய் ராங்கிரெட்டி கின்னஸ் உலக சாதனை ஒன்றையும் புரிந்துள்ளார். பத்து ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சாத்விக்சாய்ராஜ் -சிராக் ஷெட்டி ஜோடி, தாய்லாந்து இணையான ஜோம்கோ- கெத்ரென் ஜோடியை 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி முந்தைய சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த ஜோடி தனது அடுத்த போட்டியில் சீனாவின் ஹி ஜி டிங்- சோ ஹாவோ டாங் ஜோடியை எதிர்கொள்கிறது. இதையடுத்து பேட்மிண்டன் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடித்த அதிக வேக ஸ்மாஷ் சாதனையை இந்தியாவின் சாத்விக்சாய்ராய் முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2013இல் மலேசியா வீரரான டான் பூன் ஹூயோங், மணிக்கு 493 கிமீ வேகத்தில் ஸ்மாஷ் செய்தார். இதுவே பேட்மிண்டன் உலகில் அதி வேக ஸ்மாஷ் என்ற சாதனையாக இருந்து வந்தது.
இதையடுத்து இந்த ஸ்மாஷை விட கூடுதலாக மணிக்கு 72 கிமீ வேகத்தில் ஸ்மாஷ் செய்துள்ளார். அதாவது, சாத்விக் அடித்த ஸ்மாஷ் வேகமானது மணிக்கு 565 கீமி என்று இருந்தது. இது உலக சாதனையாக மாறியுள்ளது. இவ்வளவு அதி வேக ஸ்மாஷ் கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளது.
கொரியா ஓபன் தொடரின் முதல் நாள் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் - சிராங் ஷெட்டி ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் துருவ் கபிலா - எம்ஆர் அர்ஜுன் ஆகியோர் காயம் காரணமாக பின்வாங்கியதால் சீனா ஜோடி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடிய ஷாஸ்வாத் தலால் - ஹர்ஷித் அகர்வால் ஜோடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதேபோல் இந்தியாவின் ஒற்றையர் பிரிவு நட்சத்திர வீரர், வீராங்கனைகளான பிவி சிந்து, எச்எஸ் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்