Indian Grand Prix MotoGP 2023: Wild Card என்ட்ரி! மோட்டோ3 ரேஸில் பங்குபெறும் முதல் இந்தியரான கே.ஒய். அகமத்
இந்தியாவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டோஜிபி ரேஸில் சென்னையை சேர்ந்த கே.ஒய். அகமத், ஒயில்டு கார்டு என்ட்ரி மூலம் பங்கேற்கவுள்ளார்.
மோட்டோ 3 கிளாஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற இருக்கிறார் 26 வயதாகும் கே.ஒய். அகமத். மோட்டோ 3 கிளாஸ் ரேஸ் போட்டிகள் மோட்டோஜிபி பந்தயங்களை விட இரண்டு நிலைகள் முந்தைய பந்தயமாக உள்ளது.
இதையடுத்து அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இந்த பந்தயத்தில் ஹோண்டா NSF250R பைக்கை ஓட்ட இருக்கிறார் அகமத். கடந்த 2011இல் நடைபெற்ற மோட்டோ 3 பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ரேஸரான எஸ். சரத்குமார் 125சிசி கிளாஸில் பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொரு சென்னை ரேஸரான கே.ஒய். அகமத் தற்போது பங்கேற்கவுள்ளார். இதுதொடர்பாக இந்தோனேஷியாவில் பயிற்சியில் இருந்து வரும் அகமத் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், " உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் கனவு நிஜமாகியுள்ளது. மோட்டோஜிபி ரேஸ்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். தற்போது அதில் பங்கேற்க உள்ளேன்.
Ohvale GP மினி பைக்கில் பயிற்சியும் சோதனையும் மேற்கொண்டேன். அதில் நேரம், திறன் வெளிப்பாடு, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு மற்றும் டிவிஎஸ் ரேஸிங் ஆகியவற்றுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த இரண்டு வாரம் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தோனேஷியா மோட்டோ2 ரேஸர் டோனி டாடா ப்ரதிதா பயிற்சி அளித்து வருகிறார். ,மிகவும் அனுபவம் வாய்ந்த் அவர் நான் விரைவாக தாயார் ஆவதற்கு ஏற்ப உதவி புரிகிறார்."
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டோஜிபி ரேஸ் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச சர்க்யூட்டில் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் ஒயில்டு கார்டு என்ட்ரி மூலம் கே.ஒய், அகமத் பங்கேற்கவுள்ளார்.
டாபிக்ஸ்