India Women Won: வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி!
இந்திய மகளிர் சார்பில் மின்னு மினி, தேவிகா வைத்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டினர். ஜெமிமா 1 விக்கெட்டை சாய்த்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
எனினும் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி ஜெயித்திருந்ததால் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
டாக்காவில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களில் சுருண்டது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் 40 ரன்களை விளாசினார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் தரப்பில் அதிகபட்சம் ரபேயா கான் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடியது. அந்த அணி 6 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறிய போதிலும், ஷமினா சுல்தானாவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. அவர் 42 ரன்கள் எடுத்தார். 18.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வங்கதேசம் மகளிர் அணி வெற்றி கண்டது.
இந்திய மகளிர் சார்பில் மின்னு மினி, தேவிகா வைத்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சுருட்டினர். ஜெமிமா 1 விக்கெட்டை சாய்த்தார். இவ்வாறாக வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றார்.
இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்